காளையார்கோவில், புலியடிதம்மம் பகுதிகளில் 4 கடைகளின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு மர்ம ஆசாமிகள் கைவரிசை
காளையார்கோவில், புலியடிதம்மம் பகுதிகளில் உள்ள 4 கடைகளின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றுள்ளனர்.
காளையார்கோவில்,
காளையார்கோவில், கிருஷ்ணாநகரை சேர்ந்தவர் தண்டபாணி(வயது 40). இவர் அருகில் உள்ள புலியடிதம்மம் கிராமத்தில் மருந்து கடை வைத்துள்ளார். இவர் கடந்த 8–ந்தேதி இரவு வழக்கம்போல் தனது கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். மறுநாள் காலையில் அவரது உறவினர் ஜெயபால் என்பவர் தண்டபாணியின் கடைக்கு சென்றுள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து, தண்டபாணிக்கு அவர் தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் தண்டபாணி கடைக்கு சென்று பார்த்தபோது, கடையினுள் இருந்து ரூ.48 ஆயிரம் திருடுபோய் இருந்தது. இதேபோன்று அந்த கடைக்கு அருகில் பழனிசாமி என்பவருக்கு சொந்தமான பலசரக்கு கடையிலும் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அதன்பேரில் பழனிசாமி வந்து பார்த்தபோது, கடையில் இருந்த 1 கிராம் தங்க மோதிரம், வெள்ளி பொருட்கள் திருடுபோனது.
இதேபோல் காளையார்கோவில் மேலரத வீதியில் செல்போன் ரீசார்ஜ் கடை நடத்தி வருபவர் பிரான்சிஸ்(34). கடந்த 8–ந்தேதி இரவு இந்த கடையின் பூட்டை உடைத்து ரூ.40 ஆயிரத்து 500–ஐ மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றுள்ளனர். மறுநாள் கடையை திறக்கவந்த பிரான்சிஸ் பணம் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் அதே நாளில் காளையார்கோவில், கல்லல் ரோட்டில் செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான பால் விற்பனை கடையின் பூட்டை உடைத்து, கடையினுள் இருந்த ரூ.21 ஆயிரத்து 650–ஐ மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றுவிட்டனர்.
இந்த திருட்டு சம்பவங்கள் குறித்த புகாரின்பேரில் காளையார்கோவில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ரஞ்சித் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடிவருகிறார். காளையார்கோவில் பகுதியில் ஒரே நாளில் 4 கடைகளில் நடந்த திருட்டு சம்பவத்தால் அப்பகுதியை சேர்ந்த வியாபாரி பீதி அடைந்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை போலீசார் விரைந்து பிடிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story