ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 March 2018 3:30 AM IST (Updated: 11 March 2018 1:27 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் அய்யாத்துரை தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் கணேசன், சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சிவாஜி, பொருளாளர் சந்தானம், துணை தலைவர் குருவேல், இணை செயலாளர் குமார் உள்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள், பம்பு ஆபரேட்டர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும். அரசாணை 62–ன்படி ஊதிய உயர்வு உடனடியாக வழங்கப்பட வேண்டும். மாத உதவித்தொகையாக ரூ.300 வழங்க வேண்டும். துப்புரவு பணியாளர்களுக்கு அடையாள அட்டை, கையுறை, தளவாடப்பொருட்கள் அளிக்க வேண்டும். பணியில் இருக்கும் போது மரணமடையும் ஊழியர்களின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். கிராம ஊராட்சிகளில் ஊழியர்களுக்கான பதிவேட்டை முறையாக பராமரிக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி துறை ஊழியர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Next Story