பெண்கள் பிரச்சினைகளை துணிச்சலுடன் எதிர்கொள்ள வேண்டும் நீதிபதி கயல்விழி அறிவுரை


பெண்கள் பிரச்சினைகளை துணிச்சலுடன் எதிர்கொள்ள வேண்டும் நீதிபதி கயல்விழி அறிவுரை
x
தினத்தந்தி 11 March 2018 3:00 AM IST (Updated: 11 March 2018 1:27 AM IST)
t-max-icont-min-icon

பெண்கள் தங்களின் வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகளை துணிச்சலுடன் எதிர்கொள்ள வேண்டும் என்று ராமநாதபுரத்தில் நடந்த மகளிர் தினவிழாவில் மாவட்ட நீதிபதி கயல்விழி பேசினார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் பெண் போலீசார் கலந்து கொண்ட மகளிர் தினவிழா கோர்ட்டு வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட நீதிபதி கயல்விழி தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைத்துரை முன்னிலை வகித்தார். தலைமை குற்றவியல் நீதிபதி அனில்குமார் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட நீதிபதி கயல்விழி பேசியதாவது:–

 மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டு வரும் வேளையில் மகளிருக்கான உரிமைகள் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை. என்னதான் மகளிருக்காக பல உரிமைகள் உருவாக்கப்பட்டாலும் அதனை தடுப்பவர்கள் அதிகம் உள்ளனர். பெண்களின் தாய்மை மிகவும் உயர்வானது.

ஆண்கள் தாயை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். நாட்டில் பெண்களின் அடிமைத்தனம் மாறிவந்தாலும் ஒவ்வொரு மகளிரும் வாழ்வில் பலவிதமான பிரச்சினைகளை இன்றளவும் எதிர்கொள்ள வேண்டி உள்ளது. பெண்கள் பிரச்சினைகளை துணிச்சலுடன் எதிர்கொண்டு வாழ்வில் வெற்றிபெற வேண்டும்.

ஒவ்வொரு பெண்ணும் இந்த மகளிர் தினவிழாவில் நாம் ஏதாவது சாதிக்க வேண்டும், முதலிடம் பெற வேண்டும் என்ற உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். போலீஸ் நிலையங்களுக்கு வரும் பெண்களை போலீசார் மரியாதையாக நடத்தி அவர்களின் குறைகளை கனிவுடன் கேட்க வேண்டும். காக்கி உடைக்கென்று தனி மரியாதை உள்ளது. தவறு செய்பவர்கள் பார்த்து பயப்படும் உடை காக்கி உடைதான். அந்த உடையை அணிந்துள்ள நீங்கள் சிறப்பாக செயல்பட்டு வாழ்வில் வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் சப்–கோர்ட்டு நீதிபதி ப்ரீத்தா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story