பழனியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்


பழனியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 March 2018 3:00 AM IST (Updated: 11 March 2018 1:34 AM IST)
t-max-icont-min-icon

பழனியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பழனி,

பழனி பஸ் நிலையம் அருகே எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் (மேற்கு) சையது இபுராகிம் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் தமிம்அன்சாரி அனைவரையும் வரவேற்றார். மாவட்ட தலைவர் (மேற்கு) கைசர் அலி கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் சிரியா, இலங்கையில் முஸ்லிம்கள் கொல்லப்படுவதை கண்டித்தும், இந்த சம்பவத்துக்கு தமிழக அரசு கண்டனத்தை தெரிவிக்கக்கோரியும் கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story