நிலத்தை அபகரிக்க முயற்சி: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மீது வழக்கு
தேனி அருகே நிலத்தை அபகரிக்க முயற்சி செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி,
தேனி பாரஸ்ட்ரோடு 9–வது தெருவை சேர்ந்த சிவனாண்டி தேவர் மகன் ராஜேந்திரன். இவருக்கு சொந்தமான 43 சென்ட் நிலம் அல்லிநகரம் பகுதியில் உள்ளது. இந்த நிலத்தை கருவேல்நாயக்கன்பட்டியை சேர்ந்த சில்லார் என்பவருடைய மகள் காமாட்சியம்மாள் மற்றும் அவருடைய சகோதரர்களுக்கு சொந்தமான நிலம் என்று தேனி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதை மறைத்து, காமாட்சியம்மாளும் அவருடைய சகோதரர்களான காமராஜ், முத்துராஜ், கருப்பசாமி, வீரமணி ஆகிய 5 பேரும் நிலத்தை அபகரிப்பதற்காக போலி ஆவணங்கள் மூலம் பாகப்பிரிவினை செய்து பத்திரம் பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ராஜேந்திரன் புகார் செய்தார். அதன்பேரில் காமராஜ் உள்பட 5 பேர் மீதும் மாவட்ட நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸ் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
Next Story