சீனாவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டால் புதுவைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் - சீன தூதர் லூஷா ஹு பேச்சு
சீனாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டால் புதுவைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று இந்தியாவிற்கான சீன தூதர் லூஷா ஹு கூறினார்.
புதுச்சேரி,
புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்திற்கு கடந்த 1951-ம் ஆண்டு வந்து தங்கி இந்திய சீன நல்லுறவை பலப்படுத்தும் வகையில் செயல்பட்ட சீன அறிஞரும், கலைஞருமான ஹூசூயின் நினைவை போற்றும் வகையில் ஓட்டல் அக்கார்டில் நேற்று சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
இதன் தொடக்க விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் 4 முறை சீனாவுக்கு சென்றுள்ளேன். இந்தியாவும் சீனாவும் ஒரே மாதிரியான கலாசாரத்தில் பின்னி பிணைந்துள்ளன. அதாவது இலக்கியம், கட்டிடக்கலை, கலாசாரம் உள்ளிட்ட துறைகளில் இந்தியாவும், சீனாவும் ஒரே மாதிரியாக உள்ளது. நான் பிரதமர் அலுவலக மந்திரியாக இருந்தபோது சீன தூதரகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று போடப் பட்டது. அதன்படி, இந்திய ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். அதிகாரிகள் சீனாவுக்கு சென்றும், சீன அதிகாரிகள் இந்தியாவிற்கு வந்தும் தங்கி பயிற்சி பெறலாம்.
தற்போது இந்தியாவும், சீனாவும் உலகில் சக்திமிக்க வல்லரசு நாடுகளாக வளர்ந்து கொண்டு இருக்கின்றன. எனவே உலகின் எதிர்காலமே இந்தியாவும், சீனாவும் தான். புதுச்சேரி இந்தோ-பிரெஞ்சு கலாசாரம் கொண்ட மாநிலம். புதுச்சேரியுடன் சீனா நல்லுறவுடன் இருப்பதன் மூலம் உலக நாடுகளின் சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்க முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் இந்தியாவிற்கான சீன தூதர் லூஷா ஹு பேசியதாவது:-
சீன அறிஞர் ஹூசூ புதுச்சேரியில் 27 ஆண்டுகள் தங்கி இருந்து மிகச்சிறந்த பணியை வழங்கியுள்ளார். அவர் 50 இந்து மத கருத்துகளை சீன மொழியில் மொழிப் பெயர்த்துள்ளார். புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் தங்கி இருந்ததால் அரவிந்தரின் நூல் களையும் சீன மொழியில் மொழி பெயர்த்துள்ளார். யோகா நன்கு கற்றவர். தென்னிந்திய மதம் சார்ந்த இலக்கிய நூல்கள் சீனாவுடைய கல்வித்தரத்தை உயர்த்த முக்கிய காரணமாக உள்ளது.
இந்தியாவும், சீனாவும் கல்வித்துறையில் இன்னும் அதிக முதலீடு செய்ய வேண்டும். அறிஞர் ஹூசூ புதுச்சேரியில் இருந்து சீனாவிற்கு திரும்பி வந்த பின்னர் நான் அவரிடம் கல்வி கற்றேன். சீனாவில் உள்ள தழி நகரம் மிகச்சிறந்த சுற்றுலா நகரமாகும். அதேபோல் புதுச்சேரியும் நல்ல சுற்றுலா நகரம்தான். இந்த இரு சுற்றுலா நகரங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வதற்கு முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இந்த ஒப்பந்தம் அமலுக்கு வரும்போது புதுச்சேரிக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் சீன தூதரின் மனைவி ஷியாங் ஜிலி, துணை தூதர் ஷான் ஜியாங்சிங் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ, இந்திய கம்யூனிஸ்டு தேசியக்குழு உறுப்பினர் நாரா.கலைநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக அரவிந்தர் ஆசிரமத்தில் நடந்த நிகழ்ச்சியில் சீன தூதர் லூஷா ஹு, சீன அறிஞர் ஹூசூ வரைந்த ஓவிய கண்காட்சியை திறந்துவைத்து, பார்வையிட்டார்.

Related Tags :
Next Story