காவிரி மேலாண்மை குறித்த காலக்கெடுவுக்குள் அமைக்காவிட்டால் மத்திய அரசு அலுவலகங்களை இழுத்து பூட்டுவோம்
காவிரி மேலாண்மை வாரியத்தை குறித்த காலக்கெடுவுக்குள் அமைக்காவிட்டால் மத்திய அரசு அலுவலகங்களை இழுத்து பூட்டுவோம் என்று தஞ்சையில் நடந்த தமிழக வாழ்வுரிமைக்கட்சி மாநாட்டில் வேல்முருகன் அறிவித்தார்.
தஞ்சாவூர்,
தமிழக வாழ்வுரிமை கட்சியின் 7-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் தமிழக விவசாயிகள் வாழ்வுரிமை பாதுகாப்பு மண்டல மாநாடு தஞ்சையில் நேற்று நடந்தது. மாநாட்டிற்கு மாவட்ட செயலாளர் பாபு தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கலைச்செல்வன், பொருளாளர் தமிழரசன், வக்கீல் அணி செயலாளர் இரணியன், துணை செயலாளர் குணா, ஒன்றிய செயலாளர்கள் அன்பு வெங்கடேஷ், சுயம்புகஜேந்திரன், அண்ணாதுரை, கவிதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர செயலாளர் விஸ்வாஸ் செந்தில் வரவேற்றார்.
முன்னதாக நம்மாழ்வார் மற்றும் இறந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மாநாட்டில் கலந்து கொண்ட அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
வேல்முருகன் பேச்சு
மாநாட்டில் தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டு பேசியதாவது:-
நெற்களஞ்சியம் காய்ந்து இன்று பாலைவனம் ஆகி விவசாயிகளின் வாழ்க்கைக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் உள்ளது. இதற்கு மத்திய, மாநில அரசுகள் தான் காரணம். காவிரி நீரை பெற்றுத்தர மத்திய, மாநில அரசுகள் மறுக்கின்றன. உச்சநீதிமன்ற உத்தரவுகளும் அதை செய்யவில்லை. 20-க்கும் மேற்பட்ட மக்களின் குடிநீர் ஆதாரம் பாழ்பட்டு போய் விட்டது. காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு அநீதி ஏற்பட்டுள்ளது.
காவிரி மூலம் தமிழகத்தில் 28 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெற்றது. அது தற்போது குறைந்து விட்டது. கர்நாடகத்தில் பாசன பரப்பு உயர்ந்து விட்டது. காவிரி பிரச்சினையில் நியாயமான தீர்ப்பு நமக்கு வழங்கப்படவில்லை. தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சொல்ல நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை, பாராளுமன்றத்துக்குத்தான் அதிகாரம் என்றால் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?.
இழுத்து பூட்டுவோம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று அனைத்து கட்சிகள் கூடி தீர்மானம் நிறைவேற்றினோம். இதற்காக போராட்டங்கள் தீவிரமடையும்போது பா.ஜ.க.வினர் திசை திருப்புகிறார்கள். காவிரி மேலாண்மை வாரியத்தை குறித்த காலக்கெடுவுக்குள் மத்திய அரசு அமைக்காவிட்டால் தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களையும் இழுத்து பூட்டுவோம்.
கோடம்பாக்கத்தில் இருந்து இன்று வந்தவர்கள் முதல்-அமைச்சர் ஆகி விடலாம் என நினைக்கிறார்கள். கன்னடத்தை சேர்ந்த ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இங்கு அரசியல் அறுவடை செய்ய நினைக்கிறார்கள். நடிகர்கள் இனி நாடாளமுடியாது. அந்த சகாப்தம் முடிந்து விட்டது. விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு கட்டுப்படியான விலையை அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் ஆட்சியை விட்டு ஓடுங்கள். எங்களிடம் அதற்கான திட்டங்கள் உள்ளன. நாங்கள் விவசாயிகளை வாழவைப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
தீர்மானங்கள்
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஷேல், ஹைட்ரோகார்பன் முதலிய நச்சுஎரிவாயு போன்ற இயற்கை பேரழிவு திட்டங்களை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும். ஓ.என்.ஜி.சி. நிறுவனம் இந்த மண்ணை விட்டு விட்டு வெளியேற வேண்டும்.
கடலூர், அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 45 கிராமங்களை உள்ளடக்கிய 95 ஏக்கர் பரப்பளவில் பெட்ரோலிய மண்டலம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேலும் திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களையும் ஒன்றாக இணைத்து பெட்ரோலிய மண்டலமாக அறிவித்து அதில் 700 பெட்ரோலிய கிணறுகள் இடம்பெறவுள்ளது. இந்த திட்டங்களை தமிழக அரசு அனுமதிக்க கூடாது.
தடுத்து நிறுத்த வேண்டும்
நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3 ஆயிரம் வழங்க வேண்டும். விவசாயக்கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு தரவேண்டிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்.
மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முடிவில் மாவட்ட இளைஞரணி செயலாளர் ஹரிதாஸ் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story