திருவள்ளூரில் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்


திருவள்ளூரில் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 11 March 2018 4:15 AM IST (Updated: 11 March 2018 2:52 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட தொழிலாளர் நலத்துறை மற்றும் இதர அரசு துறைகள் இணைந்து அமைப்பு சாரா தொழிலாளர்கள், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் சிறப்பு முகாம் திருவள்ளூரில் நடந்தது.

திருவள்ளூர்,

தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் நசீர் அகமது, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி, திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிபதி இளங்கோவன் ஆகியோர் தலைமை தாங்கினர். நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் பிச்சம்மாள், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் வளர்மதி, திருவள்ளூர் ஆர்.டி.ஓ திவ்யஸ்ரீ, திருவள்ளுர் தாசில்தார் தமிழ்ச்செல்வன், சார்பு நீதிபதி சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி, மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் நசீர் அகமது, மாவட்ட நீதிபதி இளங்கோவன் ஆகியோர் முத்ரா குறும்பட குறுந்தகட்டினை வெளியிட்டனர்.

அவர்கள் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கு நலவாரிய அட்டைகளை வழங்கினார்கள்.

Next Story