பாலத்தின் இருபுறமும் தடுப்பு வேலி அமைக்க வேண்டும்


பாலத்தின் இருபுறமும் தடுப்பு வேலி அமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 11 March 2018 4:00 AM IST (Updated: 11 March 2018 3:16 AM IST)
t-max-icont-min-icon

மணிமங்கலம்-நடுவீரப்பட்டு சாலையில் ஆபத்தான நிலையில் இருக்கும் பாலத்தின் இருபுறமும் தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள மணிமங்கலம் கிராமத்தில் இருந்து நடுவீரப்பட்டு கிராமத்துக்கு செல்லும் வழியில் அடையாறு கால்வாய் பாலம் உள்ளது.

இந்த பாலத்தின் வழியாக படப்பை, சோமங்கலம், பூந்தண்டலம், அமரம்பேடு, குன்றத்தூர், எருமையூர், வரதராஜபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் முக்கிய சாலையாக அமைந்துள்ளது. இந்த சாலையின் வழியாக தினந்தோறும் ஏராளமானோர் நடந்தும், வாகனங்களிலும் சென்று வருகின்றனர்.

இந்த பாலத்தின் இருபுறமும் இருந்த இரும்பு கம்பிகள் ஏற்கனவே சாய்ந்து விபத்து ஏற்படும் அபாய நிலையில் உள்ளது. எனவே வரும் காலங்களில் பெரும் விபத்து, உயிர் சேதம் ஏற்படாமல் தடுக்க மணிமங்கலத்தில் இருந்து நடுவீரப்பட்டு கிராமத்துக்கு செல்லும் வழியில் உள்ள இந்த அடையாற்றின் கால்வாய் பாலத்தின் இருபுறமும் உறுதியான, பாதுகாப்பான தடுப்புகள் அமைத்து தரும்படி அந்த பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story