சிமெண்டு ஏற்றி சென்ற ராட்சத லாரி கவிழ்ந்தது


சிமெண்டு ஏற்றி சென்ற ராட்சத லாரி கவிழ்ந்தது
x
தினத்தந்தி 12 March 2018 4:00 AM IST (Updated: 12 March 2018 12:30 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர்-திருச்சி சாலையின் வளைவில் வந்த போது, அந்த வழியாக வந்த ஒரு வாகனத்திற்கு வழி விடுவதற்காக டிரைவர் ஒதுக்கிய போது எதிர்பாராதவிதமாக ராட்சத லாரி கவிழ்ந்தது.

அரியலூர்,

அரியலூர், கீழப்பழுவூரில் உள்ள தனியார் சிமெண்டு ஆலையில் இருந்து ஒரு ராட்சத லாரி சிமெண்டு ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. தவுத்தாய்குளம் அருகே அரியலூர்-திருச்சி சாலையின் வளைவில் வந்த போது, அந்த வழியாக வந்த ஒரு வாகனத்திற்கு வழி விடுவதற்காக டிரைவர் ஒதுக்கிய போது எதிர்பாராதவிதமாக ராட்சத லாரி கவிழ்ந்தது. இதில் லாரி டிரைவர் ரமேஷ் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்து அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story