போலீஸ் வேலைக்கான எழுத்து தேர்வு: நெல்லை மாவட்டத்தில் 17,900 பேர் எழுதினர்
நெல்லை மாவட்டத்தில், போலீஸ் வேலைக்கான எழுத்து தேர்வை 17 ஆயிரத்து 900 பேர் எழுதினர்.
நெல்லை,
தமிழக காவல்துறையின் சார்பில் 2017–2018–ம் ஆண்டில் புதிதாக ஆண், பெண் போலீஸ், சிறைக்காவலர்கள், தீயணைப்பு படைவீரர்களை தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது.
நெல்லை மாவட்டத்தில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரி, சதக்கத்துல்லா அப்பா கல்லூரி, சாராள்தக்கர் மகளிர் கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழக மண்டல அலுவலகம், எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரி, ரோஸ்மேரி மேல்நிலைப்பள்ளி, வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் மெட்ரிக்குலேசன் பள்ளி, தாமிரபரணி பொறியியல் கல்லூரி, சீதபற்பநல்லூர் ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரி, ஆலங்குளம் சர்தார்ராஜா பொறியியல் கல்லூரி, பி.எஸ்.என். பொறியியல் கல்லூரி, எப்.எக்ஸ். பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய இடங்களில் உள்ள தேர்வு மையத்தில் எழுத்து தேர்வு நடந்தது.
நெல்லை மாவட்டத்தில் இந்த தேர்வுக்கு மொத்தம் 20 ஆயிரத்து 126 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 17 ஆயிரத்து 900 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 2 ஆயிரத்து 226 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு எழுத வந்தவர்கள் காலை 9.30 மணியில் இருந்து தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்கள் நுழைவுச்சீட்டு, அடையாள அட்டை, பேனா, தேர்வு எழுதுவதற்கான அட்டை ஆகியவற்றை மட்டும் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர். செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. தேர்வு 10 மணிக்கு தொடங்கி, 11.20 மணிக்கு முடிவடைந்தது.
இந்த தேர்வை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் தலைமையில் அனைத்து துணை போலீஸ் சூப்பிரண்டுகளும் கண்காணித்தனர். பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் நடந்த தேர்வை போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் பார்வையிட்டார். தேர்வு மையத்தில் மின்சார வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு இருந்தன. தேர்வு மையங்களுக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.
இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் கூறுகையில், ‘நெல்லை மாவட்டத்தில் போலீஸ் வேலைக்கான எழுத்து தேர்வு சிறப்பாக நடைபெற்று உள்ளது. ஆண், பெண்களுக்கு தனித்தனி மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தேர்வு எழுதக்கூடியவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு இருந்தன‘ என்றார்.
பாளையங்கோட்டையில் உள்ள மையத்தில் தேர்வு எழுத வந்த ஒரு பெண் தனது கைக்குழந்தையுடன் வந்து இருந்தார். அவர் தேர்வு எழுத செல்லும் முன்பு தனது குழந்தையை தேர்வு மையத்திற்கு வெளியே உள்ள ஒரு கடையின் முன்பு தொட்டில் கட்டி தூங்க வைத்துவிட்டு சென்றார். குழந்தையை அந்த பெண்ணின் தாயார் கவனித்துக் கொண்டார்.
இதேபோல் பல பெண்கள் தங்களுடைய குழந்தைகளுடன் வந்து இருந்தனர். அவர்கள் குழந்தைகளை தங்களுடன் வந்து இருந்த தாய் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைத்துவிட்டு தேர்வு எழுத சென்றனர்.

Related Tags :
Next Story