நெல்லை மாவட்டத்தில் 2–ம் கட்டமாக 2 லட்சத்து 64 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
நெல்லை மாவட்டத்தில் 2–ம் கட்டமாக 2 லட்சத்து 64 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
நெல்லை,
நாடு முழுவதும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ நோய் வராமல் தடுப்பதற்காக போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முதல் கட்டமாக கடந்த ஜனவரி மாதம் 28–ந்தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. நேற்று 2–வது கட்டமாக வழங்கப்பட்டது.
நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை குழந்தைகள் நலப்பிரிவில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நேற்று நடந்தது. டீன் கண்ணன் தலைமை தாங்கி, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தார். இதில் டாக்டர்கள் ரவிச்சந்திரன், பாபுகந்தகுமார், கிருஷ்ணமூர்த்தி, ஆனந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை மாவட்டத்தில் நேற்று நடந்த போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் மூலம் 2 லட்சத்து 64 ஆயிரத்து 360 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
கிராமப்புற பகுதிகளில் 1,608 மையங்களிலும், நகர்ப்புறங்களில் 150 மையங்களிலும், அனைத்து பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்களிலும், இடம் பெயர்ந்து வேலை பார்க்கும் கட்டிட தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும், செங்கல் சூளைகளில் வேலைபார்க்கும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் 70 நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலமும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. மேலும் புறவழிச்சாலை, சுங்கச்சாவடிகள், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் ஆகியவற்றிலும் முகாம் அமைக்கப்பட்டு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
இந்த சொட்டு மருந்து வழங்கும் பணியில் மருத்துவத்துறையை சார்ந்த 1,200 பணியாளர்களும், கல்வித்துறையை சார்ந்த 305 நபர்களும், சத்துணவு பணியாளர்கள் 3 ஆயிரத்து 189 பேரும், ரோட்டரி குழுவை சார்ந்த 30 நபர்களும், தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்த 2 ஆயிரத்து 255 நபர்களும் என மொத்தம் 6 ஆயிரத்து 979 பணியாளர்கள் ஈடுபட்டனர்.
நெல்லை சந்திப்பு பஸ்நிலையம், புதிய பஸ்நிலையம், ரெயில்நிலையத்திலும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நேற்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்தது. நெல்லை வண்ணார்பேட்டை நகர்நல மையத்தில் மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் பொற்செல்வன் முகாமை தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

Related Tags :
Next Story