லாரி மோதி படுகாயம்: சிகிச்சையில் இருந்த சாலைப்பணியாளர் சாவு


லாரி மோதி படுகாயம்: சிகிச்சையில் இருந்த சாலைப்பணியாளர் சாவு
x
தினத்தந்தி 12 March 2018 12:48 AM IST (Updated: 12 March 2018 12:48 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடியை சேர்ந்த தமிழ்ச்செல்வம் என்பவர் சாலை பணியாளராக வேலை செய்து வந்தார்.

காரைக்குடி,

காரைக்குடி ரெயில்வே காலனியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வம் என்பவர் சாலை பணியாளராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் காரைக்குடி பஸ் நிலையத்தில் இருந்து கோவிலூர் வரை நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று, தமிழ்ச்செல்வம் மீது மோதியது. இதில் அவர் படுகாயமடைந்தார். பின்னர் அவர் சிகிச்சைக்காக காரைக்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து குன்றக்குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தியதில், லாரி டிரைவர் சகுபர் சாதிக் என்பவர் மது போதையில் லாரியை ஓட்டிச் சென்று சாலைப்பணியாளர் தமிழ்ச்செல்வம் மீதும் மோதியது தெரியவந்தது. இதனையடுத்து சகுபர் சாதிக்கை போலீசார் கைதுசெய்தனர். இதற்கிடையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த தமிழ்ச்செல்வம் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்துபோனார்.


Next Story