சென்னை சென்டிரலில் ‘லேப்-டாப்’ திருடிய வாலிபர் கைது
சென்னை சென்டிரல் ரெயில் நிலைய வளாகத்தில் ‘லேப்-டாப்’ திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை,
சென்னை சென்டிரல் ரெயில் நிலைய வளாகத்தில் நேற்று இன்ஸ்பெக்டர் தாமஸ் ஜெசுதாசன் தலைமையிலான ரெயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு வாலிபர் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித்திரிவதை கண்டனர். அவரிடம் சென்று ரெயில்வே போலீசார் பேசியதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில்கள் கூறினார்.இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் அந்த வாலிபர் திருவள்ளூர் பகுதியை சேர்ந்த நெல்சன் மகன் தங்கதுரை (வயது 32) என்பதும், சென்டிரல் ரெயில் நிலையத்தில் பயணிகளிடம் இருந்து ‘லேப்-டாப்’ திருடியதும் தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைது செய்த ரெயில்வே போலீசார் அவரிடம் இருந்து 5 ‘லேப்-டாப்’களையும் பறிமுதல் செய்தனர்.

Related Tags :
Next Story