பெரியாரை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு கண்டனம்
பெரியாரை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மன்னார்குடி,
மன்னார்குடி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் மன்னார்குடியில் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய அவைத்தலைவர் காசிநாதன் தலைமை தாங்கினார்.தலைமை செயற்குழு உறுப்பினர் பாலு, வணிகர் நல பேரவை மாநில துணைத்தலைவர் ஞானசேகரன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் தென்னவன், முன்னாள் மாவட்ட துணைச்செயலாளர் முத்துவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் தன்ராஜ் வரவேற்றார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
ஈரோட்டில் வருகிற 24, 25-ந் தேதிகளில் நடைபெற உள்ள தி.மு.க. மாநாட்டிற்கு மன்னார்குடி மேற்கு ஒன்றியம் சார்பில் 50 வாகனங்களில் சென்று கலந்து கொள்வது. ஊராட்சிகள் தோறும் செயல்வீரர்கள் கூட்டம் நடத்துவது.
மன்னார்குடி மேற்கு ஒன்றியத்திற்குட்டபட்ட அனைத்து வாக்கு சாவடிகளிலும் தலா 20 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பது. பெரியாரை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த பா.ஜனதா கட்சி தேசிய செயலாளர் எச்.ராஜாவிற்கு கண்டனம் தெரிவிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் பொதுக்குழு உறுப்பினர் காஞ்சிதுரை, மாவட்ட மகளிர் அணி துணைச்செயலாளர் ஷோபா கணேசன், வக்கீல் இளங்கோவன், மாவட்ட பிரதிநிதிகள் பாரதிமோகன், ராஜேந்திரன், கிரி, ஒன்றிய துணைச்செயலாளர்கள் மகேந்திரன், ஸ்டாலின், தேவிகாமுருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் முருகானந்தம் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story