மாவட்டம் முழுவதும் 2–ம் கட்டமாக 1,198 முகாம்களில் போலியோ சொட்டு மருந்து
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 2–ம் கட்டமாக 1,198 முகாம்களில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 28–ந் தேதி நடைபெற்ற முதல் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாமில், ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 96 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று 2–ம் கட்டமாக கிராம பகுதிகளில் 1,079 முகாம்கள், நகராட்சி பகுதிகளில் 119 முகாம்கள் என மொத்தம் 1,198 முகாம்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
இதில் பொது சுகாதாரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், சத்துணவு, பள்ளிக்கல்வித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, வருவாய்த் துறை, ரோட்டரி சங்கம், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் தன்னார்வலர்கள் என சுமார் 4,823 பணியாளர்கள் ஈடுபட்டனர். மேலும் மக்கள் கூடும் இடங்களான பஸ் நிலையம், ரெயில் நிலையம், சந்தைகள், சினிமா தியேட்டர்கள், கோவில்கள், சுங்கச்சாவடி போன்ற இடங்களில் 48 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
சமுதாயத்தில் பின் தங்கி உள்ள மக்களான நாடோடிகள், நரிக்குறவர்கள், கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகள் மற்றும் போக்குவரத்து வசதி இல்லாத மலை கிராமங்களில் உள்ள குழந்தைகள் பயன்பெறும் வகையில் 36 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு இருந்தது.
நாமக்கல் நகராட்சியை பொறுத்த வரையில் கோட்டை சாலையில் உள்ள தாய், சேய் நலவிடுதியில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியை நகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதேபோல் பஸ்நிலையம், அரசு ஆஸ்பத்திரி, அங்கன்வாடி மையங்கள் என பல்வேறு இடங்களில் நேற்று 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதில் விடுபட்ட குழந்தைகளுக்கு இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) வீடுகளுக்கு சென்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story