மாநிலத்தின் தேவையைவிட குறைவான உற்பத்தி: கிராமப்புறங்களில் பால் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை: அமைச்சர் ஷாஜகான் பேச்சு
புதுவை மாநிலத்தின் தேவையைவிட பால் உற்பத்தி 55 ஆயிரம் லிட்டர் குறைவாக உள்ளதால், கிராமப்புறங்களில் பால் உற்பத்தியை பெருக்க அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று அமைச்சர் ஷாஜகான் கூறினார்.
காலாப்பட்டு,
புதுச்சேரி அரசின் கால் நடைத்துறை சார்பில் காலாப்பட்டு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சஞ்சீவி நகரில் கால்நடை கண்காட்சி மற்றும் சிறந்த கால்நடைகளுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கால்நடைத்துறை இயக்குனர் பத்மநாபன் வரவேற்றார். நிகழ்ச்சியில் அமைச்சர் ஷாஜகான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கால்நடை கண்காட்சியை பார்வையிட்டார். மேலும் இந்த கண்காட்சியில் சிறந்ததாக தேர்வு செய்யப்பட்ட மாடுகள் மற்றும் கோழிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் ஷாஜகான் பேசியதாவது:-
புதுச்சேரி மாநிலத்துக்கு நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்து 35 ஆயிரம் லிட்டர் பால் தேவைப்படுகிறது. ஆனால் இங்கு நாள் ஒன்றுக்கு 80 ஆயிரம் லிட்டர் பால்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. அந்த வகையில் நமது மாநிலத்தின் மொத்த தேவையைவிட 55 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தி குறைவாக உள்ளது. எனவே தேவையான 55 ஆயிரம் லிட்டர் பால் வெளிமாநிலத்தில் இருந்துதான் கொள்முதல் செய்யப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் புதுச்சேரி மாநிலத்திற்கு தேவையான பால் முழுவதையும் இங்கேயே உற்பத்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
அந்த வகையில் கிராமப்புறங்களில் பால் உற்பத்தியை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது. குறிப்பாக கிராமப் புறங்களில் பெண்கள் கால்நடை வளர்ப்பில் அதிக அளவில் ஈடுபடுகிறார்கள். அவர்களை கண்டறிந்து அவர்களுக்கு மானிய விலையில் கறவை மாடுகள் வழங்கப்படும். இவ்வாறு வழங்குவதில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு 35 சதவீத மானிய விலையிலும், மற்றவர்களுக்கு 25 சதவீத மானிய விலையிலும் கறவை மாடுகள் வழங்கப்படும். இதன் மூலம் பால் உற்பத்தி அதிகரிக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் ஷாஜகான் பேசினார்.

Related Tags :
Next Story