நவீன தொழில்நுட்பங்களை போலீசார் பயன்படுத்த வேண்டும்: கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள்
நவீன தொழில்நுட்பங்களை போக்குவரத்து போலீசார் பயன்படுத்த வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள் விடுத்தார்.
புதுச்சேரி,
புதுவை காவலர் பயிற்சி பள்ளியில் புதுச்சேரி போக்குவரத்து போலீசாருக்கான விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் கவர்னர் கிரண்பெடி கலந்துகொண்டு போக்குவரத்து போலீசாருக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
அப்போது கவர்னர் கிரண்பெடி பேசியதாவது:-
புதுச்சேரிக்கு வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அவர்களின் தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்ற போலீசாருக்கு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பேச பயிற்சி அளிக்கப்பட வேண்டும். போக்குவரத்து மேலாண்மையும், குற்றத்தடுப்பும் வேறுவேறு அல்ல.
சட்டவிதி மீறல்கள் போலீசாரின் முன்பு நடைபெறக்கூடாது. போலீசார் தங்களது கடமைகளை செய்ய நவீன தொழில்நுட்பங்களை உரிய முறையில் பயன்படுத்த வேண்டும். போக்குவரத்து போலீசாரின் வாட்ஸ் அப் குரூப்பிற்கு தினமும் சட்டத்தின் ஒரு பிரிவு குறித்த விவரங்களை இன்ஸ்பெக்டர் அனுப்பவேண்டும். இது சட்டங்களைப்பற்றி அவர்கள் தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக இருக்கும்.
போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் நேரங்களில் சீரமைப்புக்கு முக்கியத்துவம் தரவேண்டும். போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டு வேகமாக செல்பவர்களை நிறுத்த வேண்டாம். அதற்கு பதிலாக புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து விதிமீறல் குறித்து நோட்டீஸ் அனுப்புங்கள். நீதிமன்ற நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுங்கள். தினமும் காலை 8 மணிமுதல் அனைத்து சிக்னல்களிலும் விதிமுறை மீறல் குறித்து வீடியோ பதிவு செய்யுங்கள். விதிகளை மீறியவர்களுக்கான குற்றச்சாட்டுக்கு அந்த பதிவு ஆதாரமாக அமையும்.
உயர் போலீஸ் அதிகாரிகள் தினமும் காலை சிக்னல் பகுதிகளுக்கு சென்று போக்குவரத்தை சீரமைக்க திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். போக்குவரத்துக்கான சாலையை ஆக்கிரமித்து இருப்பவர்கள் ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசமின்றி நடவடிக்கை எடுக்கவேண்டும். சிறப்பாக பணியாற்றும் போலீசாரை கண்டறிந்து கவுரவிக்க வேண்டும். மாதந்தோறும் டி.ஜி.பி. தலைமையில் சாலை பாதுகாப்பு குறித்த கூட்டம் நடத்தப்பட வேண்டும். இதில் பொதுப்பணித்துறை, போக்குவரத்துத்துறை உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய துறைகளை சேர்ந்த அதிகாரிகளும் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு கவர்னர் கிரண்பெடி கூறினார்.

Related Tags :
Next Story