விவசாயிகள் பேரணி எதிரொலி: பொதுத்தேர்வுக்கு விரைவாக செல்லுங்கள்
மராட்டியத்தில் தற்போது 10–ம் வகுப்பு மாணவர்களுக்கான எஸ்.எஸ்.சி. பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது.
மும்பை,
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் சட்டப்பேரவை நோக்கி நாளை பேரணியாக செல்கின்றனர்.
இந்த நிலையில் மராட்டிய கல்வி மந்திரி வினோத் தாவ்டே நாளை பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் தேர்வுக்கு காலதாமதமின்றி செல்லுமாறு அறிவுறுத்தினார். அவர் இது குறித்து வெளியிட்டுள்ள தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:–
நாளை விவசாயிகளின் பிரமாண்ட பேரணி நடைபெற இருப்பதைக் கவனத்தில் கொண்டு 10–ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு மையத்திற்கு சரியான நேரத்தில் சென்று கால தாமதத்தை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேர்வுக்கு செல்லும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.
Related Tags :
Next Story