மராட்டிய மேல்-சபையில் பலத்தை அதிகரிக்கிறது, பா.ஜனதா
மராட்டிய மேல்-சபையில் இந்த ஆண்டில் 21 எம்.எல்.சி.க்களின் பதவி காலம் நிறைவு பெறுகிறது. இந்த தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி மேல்-சபையில் பலத்தை அதிகரிக்க பா.ஜனதா திட்டமிட்டு உள்ளது.
மும்பை,
மராட்டிய மேல்-சபையில் 78 உறுப்பினர்கள் (எம்.எல்.சி.) உள்ளனர். இதில் 21 உறுப்பினர்களின் பதவி காலம் இந்த ஆண்டில் நிறைவு பெறுகிறது.
இதில் 11 பேர் எம்.எல்.ஏ.க்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள். மற்ற 10 எம்.எல்.சி.க்களில் 6 பேர் உள்ளாட்சி அமைப்புகள் மூலமும், பட்டதாரி தொகுதிகள் மற்றும் ஆசிரியர் தொகுதிகள் மூலம் தலா 2 பேரும் தேர்வு செய்யப்பட்டவர்கள்.
எம்.எல்.ஏ.க்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட மேல்-சபை துணை தலைவர் மாணிக்ராவ் தாக்கரே, சரத் ரன்பிசே, சஞ்சய் தத் (இவர்கள் 3 பேரும் காங்கிரசை சேர்ந்தவர்கள்), சுனில் தத்காரே, நரேந்திர பாட்டீல், ஜெய்தேவ் கெய்க்வாட், அமர்சிங் பண்டிட், (4 பேரும் தேசியவாத காங்கிரசை சேர்ந்தவர்கள்), விஜய் கிர்கர், கால்நடைத்துறை மந்திரி மகாதேவ் ஜான்கர் (2 பேரும் பா.ஜனதாவை சேர்ந்தவர்கள்) அனில் பிரதாப் (சிவசேனா), ஜெயந்த் பாட்டீல் (பி.டபுள்யூ.பி) ஆகிய 11 பேரும் வருகிற ஜூலை 27-ந்தேதி ஓய்வு பெறுகிறார்கள்.
எனவே இந்த 11 காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்தல் ஜூலை 27-ந் தேதிக்கு முன்பாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிகபட்சமாக 122 எம்.எல்.ஏ.க்களை கொண்டுள்ள பா.ஜனதா ஆதிக்கம் செலுத்த உள்ளது. அந்த கட்சி 5 எம்.எல்.சி. வேட்பாளர்களை போட்டியில் நிறுத்தி வெற்றி பெற முயற்சி செய்ய உள்ளது.
கூட்டணி கட்சியான சிவசேனாவுக்கு சட்டசபையில் 63 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அந்த கட்சி 2 எம்.எல்.சி.க்களை தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளது. காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து 3 எம்.எல்.சி.க்களை மட்டுமே வெற்றி பெற செய்ய முடியும். மற்றொரு எம்.எல்.சி. பதவியை கைப்பற்றப் போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்காக சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகளை தங்கள் வசப்படுத்த பெரிய கட்சிகள் முயன்று வருவதாக கூறப்படுகிறது.
மேல்-சபையில் தற்போது தேசியவாத காங்கிரஸ் 23 எம்.எல்.சி.க்களுடன் பெரிய கட்சியாக விளங்குகிறது. பா.ஜனதாவுக்கு 18 எம்.எல்.சி.க்கள் உள்ளனர். இந்த ஆண்டில் காலியாக உள்ள 21 பதவியிடங்களுக்கு நடைபெறும் தேர்தலில் பா.ஜனதா ஆதிக்கம் செலுத்தி, மேல்-சபையில் தனது பலத்தை அதிகரிக்க வியூகம் வகுத்து வருகிறது.
இதேபோல நாடாளுமன்ற மேல்-சபைக்கு மராட்டியத்தில் இருந்து 6 எம்.பி.க்களை தேர்வு செய்ய வருகிற 23-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் பா.ஜனதா மட்டும் 3 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story