செல்லகெரேயில் தாசில்தாரை ஆபாசமாக திட்டிய பா.ஜனதா கவுன்சிலர் கைது
செல்லகெரேயில் தாசில்தாரை ஆபாசமாக திட்டிய பா.ஜனதா கவுன்சிலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிக்கமகளூரு,
சித்ரதுர்கா மாவட்டம் செல்லகெரே தாலுகா தாசில்தாராக இருப்பவர் காந்தராஜ். செல்லகெரே டவுன் பஞ்சாயத்து கவுன்சிலராக இருப்பவர் சிவமூர்த்தி. காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சிவமூர்த்தி, அந்த கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்தார்.
இந்த நிலையில், சிவமூர்த்தியின் வார்டுக்கு செய்ய வேண்டிய வளர்ச்சி பணிகளை தாசில்தார் காந்தராஜ் செய்து கொடுக்கவில்லை என தெரிகிறது. இதுதொடர்பாக சிவமூர்த்தி பலமுறை தாசில்தாரை தொடர்பு கொண்டு வளர்ச்சி பணிகள் குறித்து பேசி உள்ளார். ஆனாலும், தாசில்தார் காந்தராஜ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.
பா.ஜனதா கவுன்சிலர் கைது
இதனால் ஆத்திரமடைந்த சிவமூர்த்தி கடந்த சில தினங்களுக்கு முன்பு காந்தராஜை செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாக திட்டியதாக தெரிகிறது. இதனை காந்தராஜ் பதிவு செய்துகொண்டார். இந்த நிலையில் காந்தராஜ் அந்த உரையாடல் பதிவுடன் செல்லகெரே போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பா.ஜனதா கவுன்சிலர் சிவமூர்த்தியை கைது செய்தனர்.
இதற்கிடையே, தாசில்தார் காந்தராஜை, கவுன்சிலர் சிவமூர்த்தி ஆபாசமாக திட்டும் செல்போன் உரையாடல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story