கெடிலம் ஆற்றில் மணல் அள்ளுவதை தடுத்து நிறுத்த வேண்டும், கலெக்டரிடம் பெண்கள் மனு
விவசாயம் மற்றும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண கெடிலம் ஆற்றில் மணல் அள்ளுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் பெண்கள் மனு கொடுத்தனர்.
கடலூர்,
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் தண்டபாணி தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பண்ருட்டி அருகே உள்ள காமாட்சி பேட்டை கிராமத்தைசேர்ந்த பெண்கள், கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
அந்த மனுவில் எங்கள் கிராமத்தில் கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்று வந்த மணல் கொள்ளையால் விவசாயம் பொய்த்து போனது. மேலும் நிலத்தடி நீர் உப்புதன்மையுடன் மாறியதால் குடிநீர் பிரச்சினையும் ஏற்பட்டுள்ளது. எனவே எங்கள் கிராமத்தில் விவசாயத்தை பாதுகாக்கவும், நல்ல குடிநீர் கிடைக்கவும் கெடிலம் ஆற்றில் மணல் அள்ளுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் அள்ளுவதற்கு அரசு அனுமதி கொடுத்து இருந்தாலும் அந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும். மேலும் மணல் கொள்ளையை தட்டிக்கேட்ட பெண்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கை வாபஸ் பெறுவதோடு, பொய் புகார் கொடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அதேபோல் வான்பாக்கம் அருகே உள்ள விஸ்வநாதபுரத்தை சேர்ந்த கிராமமக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
தென்பெண்ணையாறு கரையோரம் அமைந்துள்ள எங்கள் கிராமத்தில் விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டுள்ளவர்கள் அதிகம்பேர் வசித்து வருகிறோம். தற்போது தெண்பெண்ணையாற்றில் மணல் அள்ளுவதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது. அப்படி மணல் அள்ளப்படும் பட்சத்தில் எங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். எனவே மணல் அள்ளுவதற்கு தடை விதிப்பதோடு ஆற்று தண்ணீர் கடலில் வீணாக கலப்பதை தடுக்க எங்கள் கிராமத்தில் தடுப்பணை அமைத்து தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
கீழ்கவரப்பட்டு ரஜினி மக்கள் மன்ற மகளிரணி கிளை தலைவர் பிரேமா தாமஸ் தலைமையில் கிராமமக்கள் கீழ்கவரப்பட்டு ஊராட்சியில் கடந்த 2 ஆண்டுகளாக பழுதடைந்துள்ள சிறிய குடிநீர் தொட்டிகளை சரிசெய்து தரவேண்டும், பழுதடைந்து கிடக்கும் தெரு விளக்குகளை பராமரித்து எரிய வைக்க வேண்டும் என மனு கொடுத்தனர்.
இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளர் பரணிதரன் தலையில் கட்சி நிர்வாகிகள் ரூபாய் நோட்டு நகல்களுடன் கலெக்டரிடம் நூதனமுறையில் மனு கொடுத்தனர். அந்த மனுவில் தற்போது நடைபெற்றுள்ள சத்துணவு மற்றும் கூட்டுறவு ரேஷன் கடை பணியாளர்கள் தேர்வை ரத்து செய்துவிட்டு, அரசியல் வாதிகள், இடைத்தரகர்கள் லஞ்சம் வாங்கும் முறையை ஒழித்து நேரடியாக தேர்வு நடத்தி உண்மையான தகுதி வாய்ந்த நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இதேபோல் முதியோர் உதவித்தொகை, வங்கி கடன், மணல் திருட்டு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 410 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும் விதிமுறைகளுக்குட்பட்டு துரித நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்குட்பட்டு நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு தெளிவான பதிலை அளிக்க வேண்டும் எனவும் அலுவலர்களை அறிவுறுத்தினார்.
மேலும் இந்த கூட்டத்தில் மாவட்ட சிறுசேமிப்பு துறையின் சார்பில் உலக சிக்கன நாளையொட்டி நடைபெற்ற பேச்சு மற்றும் கட்டுரைப்போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளையும், 2016-17-ம் ஆண்டில் சிறுசேமிப்பு வசூலில் சிறந்து விளங்கிய முகவர்கள் 3 பேருக்கு சான்றிதழ்களையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 பேருக்கு தலா ரூ.7 ஆயிரத்து 500 மதிப்புள்ள 3 சக்கர சைக்கிள், ஒருவருக்கு ரூ.1,500 மதிப்புள்ள ஊன்றுகோல் ஆகியவற்றை கலெக்டர் தண்டபாணி வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி விஜயா, சப்-கலெக்டர்(பயிற்சி) சிவன்அருள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story