கெந்தளாவில் புதிதாக அமைக்கப்பட்ட கிணறு மூலம் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்
கெந்தளாவில் புதிதாக அமைக்கப்பட்ட கிணறு மூலம் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை எழுதி மனுக்களாக கொடுத்தனர். அதன்படி, அதிகரட்டி பேரூராட்சி கெந்தளா கிராம மக்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கெந்தளா கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில், கடந்த 2016-ம் ஆண்டு மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.16 லட்சம் செலவில் புதிதாக கிணறு, குடிநீர் தேக்க தொட்டி, மோட்டார் பம்ப் அறை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த பணிகள் கடந்த ஓராண்டுக்கு முன்பே முடிக்கப்பட்டு விட்டன. ஆனால், இதுவரை கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட வில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், பணிகள் முடிந்ததற்கான அறிக்கை சமர்ப்பிக்கப்பட வில்லை என்று கூறி காலம் தாழ்த்தி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். எனவே, குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்வதுடன், புதிதாக அமைக்கப்பட்ட கிணறு மூலம் விரைவில் தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
ஓவேலி பேரூராட்சி எல்லமலை, பெரியசோலை, ஐயப்பன்மட்டம் ஆகிய ஆதிவாசி கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், ஆதிவாசி கிராமங்களுக்கு நக்சல் தடுப்பு நிதி மூலம் மரப்பாலம் முதல் பெரியசோலை வரை உள்ள 4 கிலோ மீட்டர் சாலையை சீரமைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் அதற்கான பணிகளை ஓவேலி பேரூராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வில்லை. இதனால் ஆதிவாசி கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே கலெக்டர் இதுதொடர்பாக விசாரணை நடத்தி ஓவேலி பேரூராட்சி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
நீலகிரி தொகுதி மக்கள் இயக்க தலைவர் ராஜ் அளித்த மனுவில், கூடலூர் பஸ் நிலையத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பொதுகழிப்பிடம் உள்ளது. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுகழிப்பிடம் மூடப்பட்டது. இதனால் பெண்கள் இயற்கை உபாதையை கழிக்க மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே பெண்கள் நலன் கருதி பொதுகழிப்பிடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
நீலகிரி மாவட்ட பா.ஜனதா விவசாய அணி தலைவர் மோகன் கொடுத்த மனுவில், ஜெகதளா பேரூராட்சி ஓதனட்டி கிராமத்தில் உள்ள 200 ஏக்கர் விளைநிலங்களில் வெள்ளைபூண்டு, அவரை, உருளைக் கிழங்கு, பீன்ஸ் போன்றவை பயரிடப்பட்டு வருகிறது. இந்த பகுதிகளில் கரடிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, கரடிகள் நடமாட்டத்தை தடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 244 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டார். இதில் மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) பாஸ்கரன், உதவி ஆணையர் (கலால்) முருகன், மாவட்ட வழங்கல் அதிகாரி தனலிங்கம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story