கலெக்டர் அலுவலகம் முன்பு எரிவாயு குழாயுடன் வந்து விவசாயிகள் போராட்டம்
விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நேற்று கோவை கலெக்டரிடம் மனு அளித்தனர்.
கோவை,
கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் ஹரிகரன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தின் போது தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சு.பழனிச்சாமி, துணைத்தலைவர் சக்திவேல் மற்றும் விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்துக்கு கைகளில் கெயில் எரிவாயு குழாய் என்று எழுதப்பட்டிருந்த பெரிய குழாயை தூக்கி கொண்டு மனு அளிக்க வந்தனர்.
அப்போது அவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோஷங் கள் எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 7 மாவட்டங்கள் வழியாக பெங்களூருக்கு எரிவாயு கொண்டு செல்வதற்காக ரூ.3 ஆயிரம் கோடியில் கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம் கடந்த 2011-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. இதற்காக 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித் தனர்.
இதனை தொடர்ந்து கடந்த 2013-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா விவசாயிகளிடம், இதுகுறித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தினார். பின்னர் மத்திய அரசிடம் விவசாய நிலங்களில் கெயில் எரிவாயு குழாய் பதிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதன்காரணமாக இந்த திட்டம் நிறைவேற்றப்பட வில்லை. தற்போது மத்திய மந்திரி ஒருவர் இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்று பாராளுமன்றத்தில் தெரிவித்து உள்ளார்.
இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் விவசாயிகள் அந்த நிலத்துக்கு வங்கிகளில் கடன் பெற முடியாது. மேலும் மானாவாரி பயிர்களை மட்டுமே பயிரிட முடியும். மா, கொய்யா, தென்னை உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்ய முடியாது. இந்த நிலங்களை விவசாயிகள் விற்பனை செய்ய முடியாத நிலையும் ஏற்படும்.
எனவே வாளையார் முதல் திருமலையாம்பாளையம், செட்டிபாளையம், பனப்பட்டி, பல்லடம், திருப்பூர், காங்கேயம் வழியாக ஓசூர் வரை நெடுஞ்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த நெடுஞ்சாலையை ஒட்டி எரிவாயு குழாய் பதிக்க வேண்டும். இதில் தமிழக முதல்- அமைச்சர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story