உடல்நலக்குறைவால் தாயார் ஆஸ்பத்திரியில் அனுமதி: தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
கருங்கல் அருகே உடல்நலம் பாதிக்கப்பட்டு தாயார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கருங்கல்,
கருங்கல் அருகே உதய மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த வர்க்கீஸ். இவருடைய மகன் சுனில் (வயது 22), கூலி தொழிலாளி. இவருக்கு கலை என்ற மனைவியும் ஒரு குழந்தையும் உண்டு. சுனிலின் தாயார் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அவரை சுனிலின் மனைவி கலை அருகில் இருந்து கவனித்து வந்தார். இதனால், நேற்று முன்தினம் இரவு சுனில் வீட்டில் தனியாக இருந்தார்.
இந்தநிலையில் நேற்று காலையில் வெகுநேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் பார்த்த போது, சுனில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து கருங்கல் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தாயார் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது மகன் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
Next Story