மாநகராட்சிக்கு பல வரிகள் செலுத்தும் போது புதிதாக குப்பை வரி விதிப்பது சர்வாதிகார செயல், வியாபாரிகள் போராட்டம்
மாநகராட்சிக்கு பல வரிகள் செலுத்தும் போது புதிதாக குப்பை வரி விதிப்பது சர்வாதிகார செயல் என்றும், உடனே இந்த குப்பை வரி வசூலிப்பதை நிறுத்த வேண்டும் என்றும் வியாபாரிகள் கூறினர்.
மதுரை,
மதுரை மாநகராட்சி குப்பை வரி வசூலிப்பதை கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாநகராட்சி அண்ணா மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. அதில் ஏராளாமான வியாபாரிகள் கலந்து கொண்டு மாநகராட்சிக்கு எதிராக கோஷம் எழுப்பினர். பின்னர் அவர்கள், மாநகராட்சி ஆணையாளரிடம் கோரிக்கை மனு ஒன்று கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
மதுரை மாநகராட்சிக்கு வியாபாரிகள் ஏற்கனவே சொத்து வரி, குடிநீர் குழாய் கட்டணம், பாதாள சாக்கடை பராமரிப்பு கட்டணம், தொழில் வரி, வணிக உரிமம் கட்டணம் போன்ற பல்வேறு கட்டணங்களை செலுத்தி வருகிறோம். இந்த நிலையில் தற்போது திடக்கழிவு மேலாண்மை பணிக்கு சேவை கட்டணம் (குப்பை வரி) வசூலிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி உணவு விடுதிகள், உணவகங்கள், தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள், ஆஸ்பத்திரிகள், திரையரங்குகள், தொழிற்சாலைகள், தொழில் மற்றும் வணிக அலுவலகங்கள், சிறு தொழில் நிறுவனங்கள், மற்றும் சந்தை வளாகங்கள் ஆகியவற்றிற்கு ஆண்டுக்கு ரூ.18 ஆயிரம் முதல் ரூ.72 ஆயிரம் வரை நிறுவனங்களுக்கு ஏற்றப்படி கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதனை பேரமைப்பின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் இந்த கட்டணத்தை வசூல் செய்வதை நிரந்தரமாக நிறுத்த வேண்டும்.
தற்போது வணிக உரிமம் கட்டணம் செலுத்த வியாபாரிகள் செல்லும் போது, சேவை கட்டணத்தையும் சேர்த்து கட்ட வேண்டும் என்று கண்டிப்பாக கூறுகின்றனர். எனவே வணிக உரிமம் கட்டணம் செலுத்த முடியாத நிலை உள்ளது. எனவே இதற்கு வருகிற 31-ந் தேதி வரை கட்டணம் செலுத்துவதற்கு கால நீட்டிப்பு செய்ய வேண்டும்.
ஏற்கனவே மாநகராட்சிக்கு செலுத்தப்படும் சொத்து வரியில் 27 சதவீதம் தோட்டி வரி என்ற பெயரிலும், சுகாதார பணிக்காக 2 சதவீதம் வணிகர்களால் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது குப்பை வரி செலுத்த சொல்வது வியாபாரிகளின் மாத வருமானத்தை பாதிக்கும். மேலும் குப்பை வரி விதிப்பது குறித்து மாநகராட்சி பொதுமக்களிடமும், வியாபாரிகளிடமும் எந்த வித கருத்தும் கேட்காமல் தன்னிச்சையாக அறிவித்து இருப்பது சட்டவிரோத மற்றும் சர்வாதிகார செயல் ஆகும். எனவே இந்த குப்பை வரியை முற்றிலும் நீக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story