கார் மோதி பிளஸ்-2 மாணவர் பலி தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பியபோது பரிதாபம்
கந்தம்பாளையம் அருகே, பிளஸ்-2 தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு திரும்பிய பிளஸ்-2 மாணவர் கார் மோதி இறந்தார். மற்றொரு மாணவர் படுகாயம் அடைந்தார்.
கந்தம்பாளையம்,
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி காளிகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் அண்ணாமலை. பால் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன் தீபக் (வயது 17). இவர் நாமக்கல் மாவட்டம் பரமத்தி தாலுகா கந்தம்பாளையத்தில் அமைந்துள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இதற்காக அவரது தாயுடன் மணியனூர் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார்.
நேற்று காலை தீபக் பொதுத் தேர்வில் கணிதம் தேர்வு எழுதி முடித்துவிட்டு மதியம் சுமார் 2.30 மணி அளவில் மொபட்டில் வீட்டிற்கு புறப்பட்டார். இவருடன் அதே பள்ளியில் சமையல் செய்து வரும் மணியனூரை சேர்ந்த வெங்கடாசலம் என்பவரின் மகன் விஜயகுமார் (17) என்ற மாணவரும் உடன் சென்றார். இந்த மாணவரும் அப்பள்ளியில் நேற்று கணிதம் தேர்வு எழுதினார்.
இருவரும் உலகபாளையம் பிரிவு ரோடு அருகே சாலையை கடக்க முயன்றபோது திருச்செங்கோடு பக்கம் இருந்து வந்த கார் அதிவேகமாக வந்து இவர்கள் மீது மோதியதில் தீபக் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இந்த விபத்தில் விஜயகுமார் படுகாயமடைந்து திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் மூங்கில்பட்டியை சேர்ந்த வடிவேல் (47) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story