குமாரபாளையத்தில் பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை
குமாரபாளையத்தில் பட்டதாரி பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குமாரபாளையம்,
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பெராந்தர்காடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம், விசைத்தறி தொழிலாளி. இவருக்கு 3 மகள்கள். இதில் முதல் 2 மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. 3-வது மகள் பிரியங்கா (வயது 22). பிகாம் பட்டதாரியான இவர் பவானியில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
குமாரபாளையம் அருகே உள்ள சின்னநாயக்கன் பாளையம் பகுதியில் வசிப்பவர் அல்லிமுருகன் என்ற முருகன். இவருடைய மகன் பிரவீன் (22). இவரும், பிரியங்காவும் கல்லூரியில் ஒன்றாக படித்தபோது இரு வருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அல்லிமுருகன், தனது மகனுடன் பழகக்கூடாது என பிரியங்காவை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த பிரியங்கா வீட்டு விட்டத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையறிந்த குமார பாளையம் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் பிரியங்காவின் சாவுக்கு காரணமான அல்லிமுருகன், அவரது மகன் பிரவீன் ஆகிய இருவரையும் கைது செய்தால்தான் பிரியங்காவின் உடலை பெற்றுக்கொள்வோம் என்று கூறி பிரியங்காவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் குமாரபாளையம் பள்ளிபாளையம் பிரிவு ரோட்டில் நேற்று இரவு சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகம், குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுத்தேவன் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தந்தை, மகன் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து சாலைமறியலை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சாலைமறியல் காரணமாக அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story