தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் 2 குடும்பத்தினர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் 2 குடும்பத்தினர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 13 March 2018 4:15 AM IST (Updated: 13 March 2018 1:37 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் 2 குடும்பத்தினர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சாமிக்கண்ணு, விவசாயி. இவர் நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு குடும்பத்தினருடன் வந்தார். கலெக்டர் அலுவலக வளாகத்தில் அவர் திடீரென மனைவி குழந்தைகளுடன் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைப் பார்த்து அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஓடிச்சென்று அவர்களிடம் இருந்த மண்எண்ணெய் பாட்டிலை பறித்து தீக்குளிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தினார்கள்.

இதுதொடர்பாக போலீசார் சாமிக்கண்ணுவிடம் விசாரித்தனர். அப்போது கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய நிலத்திற்குரிய வழிப்பாதையை அடைத்து மிரட்டல் விடுப்பவர்களால் ஏற்பட்ட மனஉளைச்சலால் குடும்பத்தினருடன் தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார். இதுதொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல் சோகத்தூர் அருகே உள்ள பூசாரிப்பட்டியை சேர்ந்த சுமதி என்பவர் தனது குடும்பத்தினருடன் தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு வந்தார். அங்கு அவரும் குடும்பத்தினரும் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்களை அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி கைகளில் இருந்த மண்எண்ணெய் பாட்டில்களை பறிமுதல் செய்தனர். நில ஆக்கிரமிப்பு தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணக்கோரி அவர்கள் தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரே நாளில் 2 குடும்பங்களை சேர்ந்தவர்கள் தீக்குளிக்க முயன்றதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பாடி பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். 

Next Story