பல்லடம், செங்கப்பள்ளி பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடைகள் திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு, கலெக்டரிடம் முறையீடு
பல்லடம், செங்கப்பள்ளி பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடைகள் திறக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு கொடுத்து முறையிட்டனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்கள் மூலமாக தெரிவித்தனர்.
பல்லடம் அருகே பருவாய் மற்றும் கோடங்கிப்பாளையம், ஆறாக்குளம் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
ஆறாக்குளத்தில் இருந்து திருச்சி சாலை செல்லும் பாதையில் உள்ள ஒரு தோட்ட பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை தொடங்க ஏற்பாடு செய்து வருகிறார்கள். அந்த இடத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் மேல்நிலைப்பள்ளி, கல்லூரிகள் மற்றும் தனியார் நூற்பாலைகள் உள்ளன. பெண்கள், மாணவ-மாணவிகள், பொதுமக்கள் தினமும் இந்த பாதையை கடந்து செல்ல வேண்டியுள்ளது. மேலும் வெளியூர் கல்லூரிக்கு செல்லும் மாணவிகள் ஆறாக்குளம் பிரிவு பஸ் நிறுத்தத்தில் நின்று பஸ் ஏறி செல்வது வழக்கம். டாஸ்மாக் கடை அமைந்தால் குடிமகன்களால் பல்வேறு இடையூறுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே டாஸ்மாக் கடையை இங்கு அமைக்காமல் வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.
பல்லடம் அருகே அருள்புரம், குங்குமம்பாளையம், பாச்சாங்காட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறோம். இங்கு புதிதாக டாஸ்மாக் கடை திறக்க ஏற்பாடு செய்து வருகிறார்கள். இந்த கடை திறக்கப்பட்டால் அந்த வழியாக மாணவ-மாணவிகள், பெண்கள் செல்ல அச்சமடைவார்கள். சமூக விரோத செயல்களும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
ஊத்துக்குளி அருகே செங்கப்பள்ளி மேட்டுப்புதூர் பகுதியை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் உள்ள விவசாய நிலத்தை யொட்டி புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க ஏற்பாடு செய்து வருகிறார்கள். கோபி-தாராபுரம் செல்லும் சாலைக்கு அருகில் இந்த கடை அமைய உள்ளது. சின்னக்காடபாளையம், பாச்சாங்காட்டுப்பாளையம், பொன்னாபுரம் போன்ற பகுதிகளும் அருகிலேயே உள்ளன. முத்தம்பாளையம், செங்கப்பள்ளி ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் டாஸ்மாக் கடை தங்கள் ஊராட்சிகளில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடையை திறக்க வேண்டாம் என்று கூறியுள்ளனர்.
திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம்(சி.ஐ.டி.யு.) சார்பில் கிராம ஊராட்சி குடிநீர் திறப்பாளர்கள், துப்புரவு தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வந்து மனு கொடுத்தனர். அவர்கள் அளித்த மனுவில், தமிழக அரசு கிராம ஊராட்சிகளில் வேலை செய்யும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி குடிநீர் திறப்பாளருக்கு 4 மணி நேரத்துக்கு ரூ.216 வீதமும், துப்புரவு தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.355-ம் ஊதியம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் கணக்கிட்டு நிலுவை தொகையுடன் வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த உத்தரவுப்படி குறைந்தபட்ச ஊதியம் மற்றும் நிலுவைத்தொகையை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
முன்னதாக மனு கொடுக்க கலெக்டர் அலுவலக குறைதீர்ப்பு கூட்ட அரங்குக்குள் சி.ஐ.டி.யு. நிர்வாகிகள் 20-க்கும் மேற்பட்டவர்களுடன் செல்ல முயன்றபோது வாசலில் நின்ற போலீசார் அவர்களை தடுத்தனர். இதனால் நிர்வாகிகளுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்காரணமாக அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் 15 பேர் மட்டும் கூட்ட அரங்குக்குள் செல்ல போலீசார் அனுமதித்தனர்.
கூட்டத்தில், தாராபுரம் அருகே வரப்பாளையத்தில் பழனி பாதயாத்திரை சென்ற நபர்கள் மீது அரசு பஸ் மோதியதில் உயிரிழந்த 2 பேருக்கு தமிழக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்த தலா ரூ.1 லட்சம் மதிப்பிலான காசோலை, சமூக பாதுகாப்பு திட்டம் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா நல வாரியத்தின் திருமண நிதி உதவித்தொகை, ஓய்வூதிய தொகை என மொத்தம் 90 பயனாளிகளுக்கு ரூ.7 லட்சத்து 48 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி வழங்கினார்.
மேலும் பணியின் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் 3 பேருக்கு இளநிலை உதவியாளர் பணி நியமன உத்தரவையும் கலெக்டர் வழங்கினார். நேற்று நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 290 மனுக்கள் பெறப்பட்டது.

Related Tags :
Next Story