விலைக்கு வாங்கிய வீட்டை பதிவு செய்வதில் தாமதம் பத்திரப்பதிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
விலைக்கு வாங்கிய வீட்டை பதிவு செய்ய அதிகாரிகள் தாமதம் செய்ததால் பத்திரப்பதிவு அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குடியாத்தம்,
குடியாத்தம் 1-வது வார்டு பகுதியில் தர்ணம்பேட்டை செரீப்நகர் உள்ளது. இந்த பகுதியில் சுமார் 400-க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளது. பெரும்பாலானவர்கள் கூலித்தொழிலாளிகளாவர். இவர்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வசித்து வருகின்றனர். நகராட்சி சார்பில் இங்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்திற்கு பட்டாவும் வழங்கப்பட்டு உள்ளது.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஒருவர் இந்த இடத்தை முழுவதும் ஏலம் எடுத்து இருப்பதாகவும், யாரும் இடத்தை விற்கவோ, வாங்கவோ கூடாது என சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்று ஆட்சேபனை தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் வங்கிகளில் கடன் உதவி வழங்கவும் கூடாது என வங்கிகளிலும் ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இங்கு வசிக்கும் செனாபேகம் (வயது 50) என்பவர் இதே பகுதியில் வேறு நபரிடம் இருந்து ஒரு வீட்டை விலைக்கு வாங்கியுள்ளார். இதை பதிவு செய்ய குடியாத்தம் பத்திரப்பதிவு (சார்பதிவாளர்) அலுவலகத்தில் அவர் மனு கொடுத்துள்ளார். ஆனால் அதனை பதிவு செய்ய சார்பதிவாளர் அலுவலர்கள் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் செனாபேகம் நேற்று 50 பேருடன் சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த தாசில்தார் கோபி, இன்ஸ்பெக்டர் இருதயராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் கமலக்கண்ணன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சார்பதிவாளர் சம்பத்திடமும் ஆலோசனை நடத்தினர். அதைத்தொடர்ந்து உயர்அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தெரிவித்தனர். அதனை ஏற்று அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story