சேலத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் ஆய்வு
சேலம் மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு நடத்தினார்.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து சேலம் அஸ்தம்பட்டியில் பயணியர் மாளிகையில் நேற்று மதியம் அரசுத்துறை அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வுக்கூட்டம் நடத்தினார். இதில் மாவட்ட கலெக்டர் ரோகிணி, மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பூங்கொடி, தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கிகளின் தலைவர் ஆர்.இளங்கோவன், மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர், துணை கமிஷனர்கள் சுப்புலட்சுமி, தங்கதுரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் உள்பட அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். மேலும், எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்றனர். அப்போது, சேலம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்தும், வளர்ச்சி பணிகள் எவ்வாறு நடக்கிறது? என்பது குறித்தும் முதல்-அமைச்சரிடம் மாவட்ட கலெக்டர் ரோகிணி விளக்கி கூறினார்.
மேலும், சட்டம், ஒழுங்கு பிரச்சினைகள் குறித்தும், ரவுடிகள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் போலீஸ் அதிகாரிகளிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் காவல்துறையினர் தீவிரமாக செயல்பட்டு மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினார். முன்னதாக பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து அவர்களிடம் மனுக்களை வாங்கினார்.
ஓமலூர் அருகே காமலா புரம், பொட்டியபுரம், தும்பிபாடி, சிக்கனம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஒரு மனுவை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
காமலாபுரம், பொட்டிய புரம், தும்பிபாடி, சிக்கனம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் 5 தலைமுறைகளாக வசித்து வருகிறோம். எங்களது தொழில் விவசாயம். அந்த விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்தி வருகிறோம். ஆனால் விமான நிலைய விரிவாக்கத்திற்காக எங்களது நிலங்களை கையகப்படுத்தும் முயற்சி நடைபெற்று வருகிறது. எங்கள் பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் நல்ல விளைச்சலை தரக்கூடியவை. தண்ணீருக்கும் பெரிதாக பிரச்சினை இல்லை. நிலங்களை கையகப்படுத்திவிட்டால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, எங்களின் நிலங்களை கையகப்படுத்தும் முடிவை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story