ரெயில் பெட்டி தொழிற்சாலையில் பயிற்சிப்பணி


ரெயில் பெட்டி தொழிற்சாலையில் பயிற்சிப்பணி
x
தினத்தந்தி 13 March 2018 11:11 AM IST (Updated: 13 March 2018 11:11 AM IST)
t-max-icont-min-icon

கபுர்தலாவில் இயங்கிவரும் ரெயில்பெட்டி தொழிற்சாலையில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகளுக்கு 195 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பிட்டர் பிரிவில் 55 பேர், வெல்டர் பிரிவில் 50 பேர் உள்பட பல்வேறு பிரிவில் பணியிடங்கள் உள்ளன. மெஷினிஸ்ட், பெயிண்டர், கார்பெண்டர், மெக்கானிக், எலக்ட்ரீசியன், எலக்ட்ரானிக் மெக்கானிக், ஏ.சி. மெக்கானிக் போன்ற பிரிவுகளுக்கும் கணிசமான பணியிடங்கள் உள்ளன.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 17-2-2018 தேதியில் 15 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

10-ம் வகுப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். பின்னர் விண்ணப்பத்தை நகல் எடுத்து, ரூ.100 இந்திய அஞ்சல் ஆணை மற்றும் சான்றுகள் இணைத்து குறிப்பிட்ட முகவரிக்கு சென்றடையும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும். நகல் விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள் 19-3-2018-ந் தேதியாகும். இது பற்றிய விரிவான விவரங்களை www.rcf.indianrailways.gov.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

Next Story