எய்ம்ஸ் மையத்தில் பேராசிரியர் பணி : 223 காலியிடங்கள்


எய்ம்ஸ் மையத்தில் பேராசிரியர் பணி : 223 காலியிடங்கள்
x
தினத்தந்தி 13 March 2018 11:18 AM IST (Updated: 13 March 2018 11:18 AM IST)
t-max-icont-min-icon

எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் பேராசிரியர், உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணிகளுக்கு 223 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

அகில இந்திய மருத்துவ அறிவியல் மையம் சுருக்கமாக எய்ம்ஸ் என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்த மையத்தின் ரிஷிகேஷ் கிளையில் பேராசிரியர், உதவி பேராசிரியர் உள்ளிட்ட கற்பித்தல் சார்ந்த பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 223 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் பேராசிரியர் பணிக்கு 31 பேரும், கூடுதல் பேராசிரியர் பணிக்கு 36 பேரும், உதவி பேராசிரியர் பணிக்கு 81 பேரும், துணை பேராசிரியர் பணிக்கு 75 பேரும் தேர்வு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புடன் குறிப்பிட்ட பிரிவில் முதுநிலை மருத்துவ படிப்பு முடித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. பணியிடங்கள் உள்ள மருத்துவப் பிரிவுகளை இணையதளத்தில் காணலாம்.

நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்கள் ரூ.3000 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விண்ணப்பதாரர்கள் இணையதளம் வழியாக 17-3-2018ந் தேதி முதல் ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 30-4-2018ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய விரிவான விவரங்களை www.aiimsrishikesh.edu.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

இதேபோல போபாலில் உள்ள எய்ம்ஸ் கிளையில் டெபுடி மெடிக்கல் சூப்பிரண்டன்ட், பப்ளிக் ரிலேசன் ஆபீசர், அக்கவுண்ட்ஸ் ஆபீசர், சட்ட அதிகாரி, சீனியர் டயட்டீசியன் போன்ற பணிகளுக்கு 12 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். எம்.டி., எம்.ஸ்., எம்.எச்.ஏ. படித்தவர்கள் டெபுடி மெடிக்கல் சூப்பிரண்டன்ட் பணிக்கு விண்ணப்பிக்கலாம். வர்த்தக பட்டப்படிப்பு, எம்.எஸ்சி. புட் சயின்ஸ் சார்ந்த படிப்புகள், சட்டப் படிப்பு மற்றும் இதர பட்டப்படிப்பு படித்தவர்களுக்கும் வாய்ப்பு உள்ளது. 45 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பை இணையதளத்தில் பார்க்கலாம். விருப்பமுள்ளவர்கள் www.aiimsbhopal.edu.in என்ற இணையதள பக்கத்தில் பார்த்துவிட்டு, 1-4-2018ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

Next Story