கன்னியாகுமரியில் 2–து நாளாக கடல் சீற்றம்; சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
கன்னியாகுமரியில் 2–வது நாளாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. ராட்சத அலைகள் எழுந்ததால் சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க போலீசார் தடை விதிக்கப்பட்டது.
கன்னியாகுமரி,
இலங்கை அருகே இந்திய கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுநிலை தீவிரம் அடைந்துள்ளது.
புகழ்பெற்ற சுற்றுலா தளமான கன்னியாகுமரியில் நேற்று (செவ்வாக்கிழமை) 2–வது நாளாக கடல் சீற்றமாக காணப்பட்டது. காலையில் இருந்தே மாவட்டம் முழுவதும் மழை மேகங்கள் சூழ்ந்திருந்தது. அவ்வப்போது மழைத்தூரல் பெய்ததது.
காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக குமரி கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசுவதால் அலைகள் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகையும் குறைவாக இருந்தது. ராட்சத அலைகள் எழுந்து ஆக்ரோஷத்துடன் கரைகளில் உள்ள பாறைகளில் மோதி சிதறியது. இதைக்கண்ட சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க சுற்றுலா போலீசார் தடைவிதித்தனர்.
சுற்றுலா பயணிகள் வருகை குறைவு, காற்றழுத்த தாழ்வு நிலை ஆகிய காரணங்களால் முக்கடல் சங்கமம் கடற்கரையில் உள்ள நடைபாதை கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தது.
விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு காலை 8 மணிக்கு தொடங்கும் படகு போக்குவரத்து வழக்கம்போல் தொடங்கி இடைவேளையின்றி மாலை 4 மணிவரை நடைபெற்றது.
மண்டைக்காடு பகுதியில் நேற்று கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால், கடலில் ராட்சத அலைகள் எழுந்து ஆக்ரோஷமாக கரையை நோக்கி வேகமாக வந்து மோதிய வண்ணம் இருந்தது.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். அவர்கள் கடலில் இறங்க ஆர்வம் காட்டினர். ஆனால், அலையின் வேகம் அதிகமாக இருந்ததால் பக்தர்கள் கடலில் இறங்காதவாறு போலீசார் கண்காணித்தனர். இதற்காக கடற்கரையில் கயிறு கட்டி பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Related Tags :
Next Story