இரும்பு பொருட்களுடன் கடத்தப்பட்ட மினி லாரி மீட்பு
டிரைவரை தாக்கி ரூ.5 லட்சம் மதிப்புள்ள இரும்பு பொருட்களுடன் கடத்தப்பட்ட மினிலாரி கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் சாலையோரம் கேட்பாரற்று நின்றது. அந்த லாரியை போலீசார் மீட்டனர்.
கும்மிடிப்பூண்டி,
மன்னார்குடியை அடுத்த சித்தமல்லி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 38). லாரி டிரைவர். இவர் கடந்த 4-ந்தேதி அதிகாலை திருமுல்லைவாயல் பகுதியில் இருந்து காற்றாலைக்கான உதிரி பாகம் தயாரிப்பதற்கான 3 டன் எடையுள்ள இரும்பு பொருட்களை கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு மினி லாரியில் ஏற்றி வந்தார். இவற்றின் மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் ஆகும்.
சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கவரைப்பேட்டை அருகே சென்றபோது, லாரியை வழிமறித்து கார் ஒன்று நின்றது. அந்த காரில் இருந்து முகத்தை துணியால் மூடியபடி, பயங்கர ஆயுதங்களுடன் இறங்கிய மர்ம நபர்கள் டிரைவர் மணிகண்டனை லாரியில் இருந்து கீழே தள்ளி உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரது செல்போனையும் பறித்துக்கொண்டு இரும்பு பொருட்களுடன் மினி லாரியை கடத்திச்சென்றனர்.
இதுகுறித்து கவரப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இந்த வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன் மேற்பார்வையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இந்தநிலையில் கடத்தப்பட்ட மினி லாரி மட்டும் நேற்று மாலை கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலை அருகே சாலையோரம் கேட்பாரற்று நின்றது. அந்த மினி லாரியை போலீசார் மீட்டனர். மேலும், கைரேகை நிபுணர்கள், லாரியில் இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.
போலீஸ் விசாரணையில், 10 பேர் கொண்ட மர்மகும்பல் லாரியை கடத்தி, அதில் இருந்த இரும்பு பொருட்களை திருடி உள்ளது. மேலும், இந்த லாரியை பயன்படுத்தி மணலி, ஆவடி மற்றும் நெமிலிச்சேரி ஆகிய பகுதிகளில் பல்வேறு திருட்டுகளில் ஈடுபட்டது தெரியவந்தது.
போலீசார் குற்றவாளிகளை நெருங்கியதால், அவர்கள் லாரியை விட்டுச்சென்றுள்ளனர். விரைவில் அவர்கள் கூண்டோடு பிடிபடுவார்கள் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Tags :
Next Story