தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரதம்


தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 14 March 2018 3:45 AM IST (Updated: 14 March 2018 1:02 AM IST)
t-max-icont-min-icon

ஆவடி தொழிற்சாலையை மூட எதிர்ப்பு தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

ஆவடி,

ஆவடியில் கடந்த 1961-ம் ஆண்டு படை உடை தொழிற்சாலை தொடங்கப்பட்டது. இங்கு ராணுவ வீரர்களுக்கு சீருடை உள்ளிட்டவை தயாரிக்கப்படுகிறது. இங்கு 810 பெண்கள் உள்பட 2,110 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் இந்த தொழிற்சாலையை மத்திய அரசு மூட உள்ளதாக கூறப்படுகிறது.

இதனை கண்டித்து கடந்த 2 மாதங்களாக தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே நேற்று அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் அசோசியேசன் கூட்டு போராட்டக்குழு சார்பில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப்போராட்டம் நடந்தது.

போராட்டத்திற்கு அகில இந்திய பாதுகாப்பு துறை ஊழியர்கள் சம்மேளன பொதுச்செயலாளர் ஸ்ரீகுமார் தலைமை தாங்கினார். இதில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்டு மாநிலச்செயலாளர் பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன், தி.மு.க. மாவட்டச்செயலாளர் சாமு.நாசர், ம.தி.மு.க. துணை பொது செயலாளர் மல்லைசத்யா, புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். போராட்டத்தில் தொழிலாளர்கள் உள்பட சுமார் ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

Next Story