இளைஞர்களுக்கு வேலை தரும் தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிக்கப்படும், அமைச்சர் கந்தசாமி உறுதி
புதுச்சேரி இளைஞர் களுக்கு வேலைவாய்ப்பு தந்தால்தான் புதிய தொழிற்சாலைகளுக்கு தொழில் தொடங்க அனுமதி அளிக்கப்படும் என்று அமைச்சர் கந்தசாமி கூறினார்.
புதுச்சேரி,
புதுவை அரசின் தொழிலாளர் துறை சார்பில் ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் வழங்கும் விழா வம்பாகீரப்பாளையத்தில் உள்ள மகளிர் ஐ.டி.ஐ.யில் நேற்று நடந்தது. விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு தரச்சான்றிதழ்களை வழங்கினார்.
விழாவுக்கு தலைமை தாங்கிய சபாநாயகர் வைத்திலிங்கம் பேசியதாவது:-
நன்றாக படிப்பவர்களுக்கு டாக்டர், என்ஜினீயர், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் என்று வாய்ப்பு உள்ளது. சிலர் இளநிலை எழுத்தர், மேல்நிலை எழுத்தர் பணிகளையும் பெற்று விடுகிறார்கள். 20 சதவீதம் பேர்தான் இப்படி வேலைவாய்ப்பினை பெறுகிறார்கள்.
மீதமுள்ளவர்கள் நல்ல வேலை தேடும் நிலைதான் இப்போது உள்ளது. ஐ.டி.ஐ.யில் படித்து விட்டு செல்பவர்களில் 10 பேரையாவது ஒவ்வொரு கம்பெனிக்கும் தொழில் பழகுநர் பணிக்கு தேர்ந்தெடுக்க செல்ல வேண்டும். அப்படி செய்தால் சிறப்பாக பணியாற்றுபவர்களுக்கு பயிற்சி முடிந்ததும் அங்கேயே வேலை கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும்.
இவ்வாறு சபாநாயகர் வைத்திலிங்கம் பேசினார்.
அமைச்சர் கந்தசாமி பேசியதாவது:-
புதுவையில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தி 1,850 பேருக்கு வேலை கொடுத்துள்ளோம். கடந்த தேர்தலின்போது வீட்டுக்கு ஒருவருக்கு வேலை என்று உறுதி கொடுத்தோம். அதை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
கடந்த ஆட்சியில் வேலைக்கு வைக்கப்பட்டவர்களுக்கு தற்போது சம்பளம் போடமுடியாத நிலை உள்ளது. இதனால் அரசுத்துறைகளில் புதிதாக யாரையும் வேலைக்கு வைக்கவில்லை.
பணமதிப்பிழப்பு, பத்திரப்பதிவு பிரச்சினை, நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடை மூடல், சரக்கு மற்றும் சேவை வரியினால் மாநில வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வருமானம் இல்லாத நிலையிலும் புதுவை அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரை அமல்படுத்தப்பட்டது.
இளைஞர்கள் வேலைவாய்ப்பினை பெற நிறைய பயிற்சி கொடுத்து அனுப்ப உள்ளோம். புதுவையில் புதிய தொழில் தொடங்க உள்ளவர்கள் புதுச்சேரி இளைஞர்களுக்கு 60 சதவீத வேலைவாய்ப்பினை கொடுத்தால்தான் அனுமதி வழங்குவோம்.
இவ்வாறு அமைச்சர் கந்தசாமி பேசினார்.
அன்பழகன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
புதுவை மாநிலத்தில் உள்ள ஐ.டி.ஐ.க்களில் படித்து ஆண்டுதோறும் 1,450 பேர் வெளியே வருகிறார்கள். புதுவை மாநிலத்தை பொறுத்தவரை வேலைவாய்ப்பகத்தில் 2 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். எந்த அரசாக இருந்தாலும் இவர்கள் அனைவருக்கும் அரசு வேலை கொடுக்க முடியாது. எனவே இளைஞர்கள் சுயதொழில் தொடங்க முன்வரவேண்டும்.
புதுவையில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பினை பிற மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கே வழங்குகின்றனர். இப்படி செய்வதால் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை. நம்மிடம் இருக்கிற சட்டத்தை அமல்படுத்தினாலே புதுச்சேரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துவிடும்.
பல தனியார் நிறுவனங் களில் பெண்களை அதிக நேரம் வேலை வாங்குகின்றனர். ஆனால் அரசால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச கூலியை வழங்குவதில்லை. படித்த இளைஞர்கள் சுயதொழில் தொடங்க கடனுதவி பெற விதிகளை எளிதாக்க வேண்டும்.
இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. பேசினார்.
தொழிலாளர் துறை ஆணையர் வல்லவன் பேசும்போது, புதுவை இளைஞர்கள் வேலைவாய்ப்பினை பெற சனிக்கிழமை தோறும் வேலைவாய்ப்பு முகாமினை நடத்த ஏற்பாடு செய்ய உள்ளோம் என்று குறிப்பிட்டார்.

Related Tags :
Next Story