போர்க் கப்பல்கள் வந்து செல்ல வசதி உள்ளதா? ராமேசுவரம் முதல் மண்டபம் வரையிலான கடல் பகுதியில் கடற்படையினர் ஆய்வு
ராமேசுவரம் முதல் மண்டபம் வரையிலான கடல் பகுதியில் போர்க்கப்பல்கள் வந்து செல்வதற்கான வழித்தடங்கள் உள்ளனவா என்பது குறித்து இந்திய கடற்படையினர் ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பனைக்குளம்,
தமிழகத்தில் கடந்த 2004-ம் ஆண்டு சுனாமி ஏற்பட்டதற்கு பின்பு கடலுக்குள் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளில் கடல் கொந்தளிப்பு மற்றும் உள் வாங்குவது அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.
இந்த நிலையில் ராமேசுவரம் முதல் மண்டபம் வரையிலான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கொச்சினில் உள்ள இந்திய கடற்படை அலுவலகம் மூலம் மிகப்பெரிய சர்வே பணி கடந்த 8-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதற்காக ராமேசுவரம்-மண்டபம் இடையே ஆழ்கடல் பகுதியில் ஐ.என்.எஸ். சட்லெஜ் என்ற பெரிய சர்வே கப்பலை நடுக்கடலில் நிறுத்தி கப்பல் கேப்டன் திரிபுவன்சிங், செயல் அதிகாரி விக்டர்பால் ஆகியோர் தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் கப்பலில் இருந்தபடியே கடலில் ஆழம், நீரோட்டத்தின் வேகம், அலைகளின் வேகம் ஆகியவற்றை செயற்கைக்கோள் மற்றும் ரேடார் உள்ளிட்ட கருவிகள் மூலம் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் கடலின் மேல் பகுதி மற்றும் கடலுக்கு அடியில் கருவிகளை செலுத்தி ஆய்வு நடத்தி வருகின்றனர். கப்பலில் இருந்து 4 சிறிய படகுகளை கடலில் இறக்கி ஒரு படகில் 4 வீரர்கள் வீதம் ஆய்வுப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல ராமேசுவரம் துறைமுக கடற்கரை, மண்டபம் தெற்கு கடற்கரை, பாம்பன் கடற்கரை மற்றும் புதுமடம் கடற்கரை பகுதிகளில் கண்ட்ரோல் ஸ்டேசன் என்ற அதிநவீன கருவியை வைத்து அதன் மூலம் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் கடல் அலைகளின் வேகம், நீரோட்டத்தின் வேகம், கடலின் ஆழம் உள்பட அனைத்தையும் பதிவு செய்து வருகின்றனர்.
இது பற்றி ஆய்வில் ஈடுபட்டு வரும் கடற்படை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
மத்திய அரசின் பாதுகாப்புத் துறை உத்தரவின்படி ராமேசுவரம், பாம்பன், மண்டபம் வரையிலான மன்னார் வளைகுடா பகுதியில் கடல் மற்றும் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியில் அனைத்து நிகழ்வுகளையும் செயற்கைக்கோள் வசதியுடன் பல்வேறு கருவிகள் மூலம் பதிவு செய்து வருகிறோம். இந்த பணியானது இன்னும் 20 நாட்கள் நடைபெறும்.
போர்க்கப்பல்கள் மற்றும் பெரிய கப்பல்கள் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிக்கு வருவதற்கான வழித்தடம் உள்ளதா, இவற்றை இந்தப் பகுதிகளில் நிறுத்த வாய்ப்பு உள்ளதா. அவ்வாறு வரும் போது ஏதேனும் இடையூறுகள் ஏற்படுமா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். முற்றிலும் கடல் வழி பாதைக்காகவே இந்த ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆய்வின் அறிக்கை மத்திய பாதுகாப்பு துறையிடம் ஒப்படைக்கப்படும். இந்த ஆய்வு மீனவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வு பணிக்கான ஏற்பாடுகளை கடற்படையின் ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் செய்து வருகிறார்.

Related Tags :
Next Story