கால்நடை மருந்தக பழைய கட்டிடத்தை அகற்ற வேண்டும்


கால்நடை மருந்தக பழைய கட்டிடத்தை அகற்ற வேண்டும்
x
தினத்தந்தி 14 March 2018 4:15 AM IST (Updated: 14 March 2018 1:41 AM IST)
t-max-icont-min-icon

படப்பையில் உள்ள கால்நடை மருந்தக பழைய கட்டிடத்தை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் படப்பையில் அரசு கால்நடை மருந்தகம் உள்ளது. இந்த மருந்தகத்தில் உள்ள சுற்றுச்சுவர் வார்தா புயலின் போது இடிந்து விழுந்தது. மரங்களும் முறிந்து விழுந்தன. ஆனால் இதுநாள் வரை அந்த மரங்கள் அகற்றப்படவில்லை, சுற்றுச்சுவரும் சீரமைக்கப்படாமல் உள்ளது.

பாதி இடிந்த நிலையில் காணப்படும் பழைய மருந்தக கட்டிடமும் அகற்றப்பட வில்லை. இந்த பகுதியில் உள்ள கிராமங்களில் இருந்து மாடுகள், ஆடுகள், நாய்கள் போன்றவற்றை சிகிச்சைக்காக நாள்தோறும் பொதுமக்கள் அழைத்து வருகின்றனர்.

இந்த கால்நடை மருந்தகத்திற்கு மிகுந்த அச்சத்துடன் பொதுமக்கள் வரவேண்டிய நிலை உள்ளது. மேலும் அருகாமையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இந்த பாதையை பயன்படுத்துகின்றனர்.

இந்த பகுதி இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவருகிறது. எனவே கால்நடை மருந்தகத்தின் பழைய கட்டிடத்தை அகற்றவும், இடிந்து கிடக்கும் சுற்றுச்சுவரை உடனடியாக சீரமைக்கவும் இந்த பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story