400 மீனவர்கள் கதி என்ன? 51 படகுகளில் சென்றவர்களை மீட்க நடவடிக்கை
குமரி மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 400 மீனவர்கள் கதி என்ன? என்பது பற்றி தெரியவில்லை. மேலும், கரை திரும்பாமல் உள்ள 51 விசைப்படகுகளில் உள்ள மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் சின்னமுட்டம், முட்டம், குளச்சல், தேங்காப்பட்டணம், தூத்தூர், மார்த்தாண்டம்துறை, நீரோடி உள்ளிட்ட 48 கடலோர கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள். குமரி மாவட்ட மீனவர்கள் கரைப்பகுதியில் இருந்து பல நூறு கடல்மைல் தொலைவுக்கு அப்பால் சென்று சுமார் 10 நாட்கள் முதல் 15 நாட்கள் வரை தங்கியிருந்து மீன் பிடிப்பார்கள்.
இந்தநிலையில் இந்திய கடல் பகுதியில் இலங்கைக்கு தெற்கே உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த பகுதியாக மாறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குமரி மாவட்டம், கேரள கடல் பகுதிகள் மற்றும் மாலத்தீவு கடலும் கொந்தளிப்பாக காணப்படும் என்றும், மணிக்கு 40 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் எனவும், ஏற்கனவே கடலுக்கு சென்றிருப்பவர்கள் உடனடியாக கரைக்கு திரும்பவேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டு வருகிறது.
நேற்றும் குமரி மாவட்டத்தில் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால், குமரி மாவட்ட கடலோர கிராமங்களில் ஒலிபெருக்கி மூலம் மீன்வளத்துறை அதிகாரிகள், மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் கடலுக்கு சென்ற மீனவர்கள் அவசர அவசரமாக கரைக்கு திரும்பி வருகின்றனர்.
இதுகுறித்து குமரி மாவட்ட மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட படகுகள் கடலுக்கு சென்றன. இவற்றில் பெரும்பாலான படகுகள் கரை திரும்பி உள்ளன. தற்போது இன்று (அதாவது நேற்று) 120 மீனவர்கள் லட்சத்தீவில் கரை சேர்ந்திருப்பதாக தகவல் வந்துள்ளது. மேலும் பல மீனவர்கள் கர்நாடகா, குஜராத் மற்றும் மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் பத்திரமாக கரை சேர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச்செயலாளர் சர்ச்சில் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் மீன்பிடிக்க சென்ற சுமார் 400 மீனவர்கள் கரை திரும்பவில்லை. அவர்கள் லட்சத்தீவு மற்றும் வெளி மாநிலங்களில் கரை சேர்ந்து இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் மீனவர்கள் கரை சேர்ந்ததாக எங்களுக்கு தகவல் கிடைக்கவில்லை. மீனவர்கள் பத்திரமாக இருப்பார்கள் என நம்புகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதுபற்றி சென்னையில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தின் குமரி கடலோரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியதையடுத்து, அது மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து செல்ல இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக தென் தமிழ்நாடு, மன்னார் வளைகுடா, குமரிமுனை ஆகிய கடற்பகுதிகளில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
இருந்தபோதிலும் கன்னியாகுமரியில் இருந்து கடலுக்குள் சென்ற 553 ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகுகளில் 502 படகுகள் கரைக்கு திரும்பிவிட்டன. மீதமுள்ள 51 படகுகள் கரை திரும்ப வேண்டும். அதை மீட்டு கொண்டு வர வருவாய்த்துறை உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.
51 படகுகளில் கர்நாடகா கடல் பகுதிகளில் 30 படகுகளும், கோவா கடல் பகுதியில் 5 படகுகளும், கொச்சி மற்றும் லட்சத்தீவு கடல்பகுதியில் 16 படகுகளும் இருப்பதாக தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அதில் கொச்சி மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் இருக்கும் 16 படகுகளை உடனடியாக மீட்கும் பொருட்டு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
மேலும், ராமநாதபுரத்தில் இருந்து சென்ற 15 படகுகளும், தூத்துக்குடியில் இருந்து சென்ற 135 படகுகளும் பாதுகாப்பாக கரை திரும்பி இருக்கின்றன. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருந்தாலும் முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஒகி புயலுக்கு பின்பு தற்போது மீண்டும் குமரி கடல் பகுதியில் புயல் வரும் ஆபத்து இருப்பதால், இதுவரை கரை திரும்பாத மீனவர்களின் குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர்.
பத்திரமாக அவர்கள் கரைக்கு வந்து சேர வேண்டும் என பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Tags :
Next Story