ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பா.ஜனதாவுடன் தொடர்பு?


ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பா.ஜனதாவுடன் தொடர்பு?
x
தினத்தந்தி 14 March 2018 3:45 AM IST (Updated: 14 March 2018 2:33 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக அரசுக்கு எதிராக கடிதம் எழுதிய ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பா.ஜனதாவுடன் தொடர்பு இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெங்களூரு,

கர்நாடக ஐ.பி.எஸ். அதிகாரிகள் சங்க தலைவர் ஆர்.பி.சர்மா, கர்நாடக அரசுக்கு எதிராக பல்வேறு புகார்களை கூறி தலைமை செயலாளருக்கு கடிதம் எழுதினார். இதுபற்றி தங்களுக்கு தெரியாது என்றும், அவர் தன்னிச்சையாக இந்த கடிதத்தை எழுதி இருப்பதாகவும் சக ஐ.பி.எஸ். அதிகாரிகள் கூறினர். அரசியல் உள்நோக்கத்துடன் இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

கடிதம் எழுதிய அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை செயலாளருக்கு முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் கர்நாடக அரசுக்கு எதிராக கடிதம் எழுதிய ஆர்.பி.சர்மாவுக்கும், பா.ஜனதா தலைவர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது பா.ஜனதா மேலிடத்தை சேர்ந்த முக்கியமான தலைவர் ஒருவர் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி, ஐ.பி.எஸ். அதிகாரி ஆர்.பி.சர்மா முக்கியத்துவம் இல்லாத துறையில் பணியாற்றுவதாகவும், அவருக்கு நிர்வாக அதிகாரம் உள்ள பிரிவில் பணி ஒதுக்கீடு செய்யுமாறும் கோரி இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

ஆர்.பி.சர்மா கடிதம் எழுதிய பின்னணி குறித்து கர்நாடக அரசு தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. ஆர்.பி.சர்மா மீது என்ன மாதிரியான நடவடிக்கையை எடுப்பது, இதனால் அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை எப்படி சமாளிப்பது என்பது குறித்தும் அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.

Next Story