தூத்துக்குடியில் பாரம்பரிய உணவுத்திருவிழா
`தூத்துக்குடி ரோச் பூங்காவில் பாரம்பரிய உணவுத்திருவிழா வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் பாரம்பரிய உணவுத்திருவிழா நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்துக்கு கலெக் டர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் கலெக்டர் வெங்கடேஷ் பேசும் போது கூறியதாவது.
தூத்துக்குடி ரோச் பூங்காவில் வருகிற 23-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை பாரம்பரிய உணவுத்திருவிழா நடத்தப்படுகிறது. தினமும் மாலை 5 மணி முதல் இரவு 9.30 மணி வரை உணவுத்திருவிழா நடக்கிறது. விழாவில் பாரம்பரிய உணவு வகைகளும், தூத்துக்குடி மாவட்டத்தின் பிரபல உணவு வகையான மக்ரூன், முதலூர் மஸ்கோத் அல்வா, கீழஈரால் சேவு, கடம்பூர் போளி, கோவில்பட்டி கடலைமிட்டாய் போன்ற உணவுவகைகள் தயார் செய்து பொதுமக்களுக்கு வழங்கப்படும். தூத்துக்குடியில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல்களும் இந்த உணவுத் திருவிழாவில் பங்கேற்று பாரம்பரிய உணவு வகைகளை தயாரித்து குறைந்த கட்டணத்தில் பொதுமக்களுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மகளிர் திட்டம், ஊட்டச்சத்து, புதுவாழ்வு, மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் பாரம்பரிய உணவுகள், சிறுதானிய உணவுகள் தயாரித்து வழங்கப்படும். இதற்காக 38 அரங்குகள் அமைக்கப்படுகின்றன.
இதில் உடல் பரிசோதனை செய்ய மருத்துவ குழு அமைக்கப்பட்டு உள்ளது. சத்துணவுத்துறை மூலம் பல வகையான கலவை சாதம் தயார் செய்யும் முறைகள் குறித்து மக்களுக்கு எடுத்துக் கூறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழ் மருத்துவத்தின் மகத்துவம் அறிந்து கொள்கின்ற வகையில் சித்த மருத்துவ அரங்கம் அமைக்கப்பட உள்ளது. இதில் இலவசமாக நிலவேம்பு கசாயம் மற்றும் பல்வேறு நோய்களுக்கு இலவசமாக மருந்துகள் வழங்கப்பட உள்ளது. வேளாண்மைத்துறையின் மூலம் சிறுதானியங்கள், காய்கறிகள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் தூத்துக்குடி உதவி கலெக்டர் பிரசாந்த், உதவி கலெக்டர் (பயிற்சி) சரவணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன், துணை ஆட்சியர் (பயிற்சி) லாவண்யா, உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தங்கவிக்னேஷ், மகளிர் திட்ட அலுவலர் ரேவதி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் முத்துலட்சுமி, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சந்திரமோகன், ராமகிருஷ்ணன், சண்முகசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story