நைஸ் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை வாபஸ் பெறும் முடிவை பா.ஜனதா ஆதரிக்கவில்லை
குமாரசாமி முதல்-மந்திரியாக இருந்தபோது நைஸ் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை வாபஸ் பெறும் முடிவை பா.ஜனதா ஆதரிக்கவில்லை என்று தேவேகவுடா குற்றம்சாட்டினார்.
பெங்களூரு,

20 மாதங்கள் ஆட்சி செய்தார்
ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் ‘விகாச பர்வா‘ என்ற பெயரில் கட்சி தொண்டர்கள் மாநாடு பெங்களூரு மகாலட்சுமி லே-அவுட்டில் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா கலந்து கொண்டு பேசியதாவது:-
காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் பரஸ்பரம் குற்றப்பத்திரிகையை வெளியிட்டன. ஆனால் குமாரசாமி 20 மாதங்கள் ஆட்சி செய்தார். அவர் நடத்திய ஆட்சியில் எந்த தவறும் நடைபெறவில்லை. இதனால் அந்த கட்சிகளால் குமாரசாமி ஆட்சி பற்றி குற்றப்பத்திரிகையை வெளியிடவில்லை. ஏனென்றால் அந்த அளவுக்கு குமாரசாமி நல்லாட்சியை நடத்தினார்.
அன்னபாக்ய திட்டம்
அதே போல் கர்நாடகத்தில் நல்லாட்சி அமைய வேண்டுமென்றால் மக்கள் எங்கள் கட்சியை ஆதரிக்க வேண்டும். நான் முதல்-மந்திரியாக இருந்தபோது நகரங்களில் இருக்கும் மக்களுக்கும் அரிசி, கோதுமை வழங்கினேன். இப்போது அன்ன பாக்ய திட்டம் என்று சொல்கிறார்கள். அதுபற்றி விமர்சிக்க நான் விரும்பவில்லை.
பெங்களூரு மாநகராட்சி கூட்டத்தில் நைஸ் திட்ட முறைகேடு குறித்து பா.ஜனதாவை சேர்ந்த பத்மநாபரெட்டி பேசுகிறார். குமாரசாமி முதல்-மந்திரியாக இருந்தபோது மந்திரிசபையில் நைஸ் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை வாபஸ் பெறும் முடிவை கூட்டணி கட்சியாக இருந்த பா.ஜனதா ஆதரிக்கவில்லை. இதை பா.ஜனதா ஆதரித்து இருந்தால் நைஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நிலம் வாபஸ் பெறப்பட்டு இருக்கும். அந்த நிலம் மீண்டும் விவசாயிகளுக்கே கிடைத்து இருக்கும்.
நான் போராடினேன்
பெங்களூரு நகர வாக்காளர்கள் அறிவுத்திறன் படைத்தவர்கள். யாரை ஆதரிக்க வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும். காவிரி வழக்கில் 2007-ம் ஆண்டு இடைக்கால தீர்ப்பு வந்தபோது அதை எதிர்த்து நான் போராடினேன். இப்போது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. இதை மாநில அரசு இனிப்பு வழங்கி கொண்டாடுகிறது.
2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நகரில் 89 லட்சம் பேர் இருந்தனர். அவர்களுக்கு தேவையான தண்ணீரை தான் சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ளது. இன்று பெங்களூரு மக்கள்தொகை 1.20 கோடி ஆகும். இந்த மக்களுக்கு குடிநீர் கொடுக்க வேண்டும். பெங்களூருவை காப்பாற்றுங்கள் என்று பா.ஜனதாவினர் பாதயாத்திரை நடத்துகிறார்கள். யாரிடம் இருந்து பெங்களூருவை காப்பாற்ற வேண்டும்?.
வித்வத் என்ற இளைஞரை காங்கிரசை சேர்ந்த என்.ஏ.ஹாரீஸ் மகன் முகமது நலபட் மற்றும் அவருடைய நண்பர்கள் தாக்கினர். அதே போன்று பெங்களூரு மாகடியில் நமது கட்சி நிர்வாகி ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கு இருக்கிறதா?.
இவ்வாறு தேவேகவுடா பேசினார்.

Related Tags :
Next Story