பட்டதாரி வாலிபரை கொடூரமாக தாக்கிய வழக்கில் கைது: காங்கிரஸ் எம்.எல்.ஏ. மகனின் ஜாமீன் மனு தள்ளுபடி
பட்டதாரி வாலிபரை கொடூரமாக தாக்கிய வழக்கில் கைதான காங்கிரஸ் எம்.எல்.ஏ. மகனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
பெங்களூரு,

எம்.எல்.ஏ. மகன் கைது
பெங்களூரு டாலர்ஸ் காலனியை சேர்ந்த தொழில்அதிபர் லோகநாத்தின் மகன் வித்வத். எம்.பி.ஏ. பட்டதாரியான இவரை, பெங்களூரு சாந்திநகர் தொகுதி (காங்கிரஸ் கட்சி) எம்.எல்.ஏ.வான ஹாரீசின் மகன் முகமது ஹாரீஸ் நலபட், கடந்த மாதம் (பிப்ரவரி) 17-ந் தேதி தனது நண்பர்களுடன் சேர்ந்து கப்பன்பார்க் அருகே உள்ள ஓட்டலில் வைத்து கொடூரமாக தாக்கினர். இதுதொடர்பாக கப்பன்பார்க் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது ஹாரீஸ் நலபட், அவரது நண்பர்கள் 6 பேரை கைது செய்துள்ளனர். தற்போது இந்த வழக்கை குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கைதான முகமது ஹாரீஸ் நலபட் உள்பட 7 பேரும் பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை வருகிற 21-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி முகமது ஹாரீஸ் நலபட் சார்பில் தாக்கல் செய்திருந்த மனுவை கடந்த 2-ந் தேதி பெங்களூரு 63-வது சிட்டிசிவில் மற்றும் செசன்சு கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டு இருந்தது.
ஜாமீன் மனு தள்ளுபடி
இதையடுத்து, முகமது ஹாரீஸ் நலபட் சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டு நீதிபதிகள் சந்தோஷ் மற்றும் ஹரீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் வித்வத் சார்பில் அரசு சிறப்பு வக்கீலாக ஷியாம் சுந்தரமும், முகமது ஹாரீஸ் நலபட் சார்பில் மூத்த வக்கீல் நாகேசும் ஆஜராகி வாதாடி வந்தனர். இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை தொடர்ந்து முகமது ஹாரீஸ் நலபட்டின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு 14-ந் தேதி(அதாவது நேற்று) வழங்கப்படும் என கடந்த 12-ந் தேதி நீதிபதிகள் அறிவித்திருந்தார்கள்.
அதன்படி, நேற்று நீதிபதிகள் சந்தோஷ் மற்றும் ஹரீஷ்குமார் தீர்ப்பு கூறினார்கள். அப்போது, இது ஒரு முக்கியமான வழக்காகும். வித்வத் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தப்பட்டது அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளது. இந்த வழக்கில் எம்.எல்.ஏ.வின் மகன் சம்பந்தப்பட்டு இருப்பதால், போலீசார் வழக்குப்பதிவு செய்ய தாமதம் செய்துள்ளனர். வித்வத் சிகிச்சை பெற்ற மருத்துவமனையில் இருந்து மருத்துவ சான்றிதழ்களும் பெறப்பட்டது நிரூபணமாகி உள்ளது. அதே நேரத்தில் இந்த வழக்கின் விசாரணை முடியாத காரணத்தால், முகமது ஹாரீஸ் நலபட் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுவதாக கூறி நீதிபதிகள் அதிரடி உத்தரவை பிறப்பித்தார்கள்.
மிகுந்த ஏமாற்றம்
கீழ் கோர்ட்டில் ஏற்கனவே ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு இருந்த நிலையில் நேற்று கர்நாடக ஐகோர்ட்டில் தனக்கு ஜாமீன் கிடைக்கும் என்று முகமது ஹாரீஸ் நலபட் மிகவும் எதிர்பார்த்திருந்தார். மேலும் சிறையில் இருந்து வெளியே வருவதற்கும் அவர் ஆயத்தமாக இருந்ததாக தெரிகிறது. ஆனால் கர்நாடக ஐகோர்ட்டும் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ததால் முகமது ஹாரீஸ் நலபட் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளார்.
இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு முகமது ஹாரீஸ் நலபட் சார்பில் இன்னும் ஓரிரு நாட்களில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Related Tags :
Next Story