எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நாளை தொடக்கம்: மாவட்டத்தில் 47 ஆயிரத்து 955 மாணவர்கள் எழுதுகிறார்கள்


எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நாளை தொடக்கம்: மாவட்டத்தில் 47 ஆயிரத்து 955 மாணவர்கள் எழுதுகிறார்கள்
x
தினத்தந்தி 15 March 2018 3:30 AM IST (Updated: 15 March 2018 12:39 AM IST)
t-max-icont-min-icon

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் இந்த தேர்வை 47 ஆயிரத்து 955 மாணவர்கள் எழுத உள்ளனர்.

விழுப்புரம், 

தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வு நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (ஏப்ரல்) 20-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த தேர்வை விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 50 தேர்வு மையங்களில் 7 ஆயிரத்து 359 மாணவர்களும், 7 ஆயிரத்து 273 மாணவிகளும், திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 79 தேர்வு மையங்களில் 9 ஆயிரத்து 41 மாணவர்களும், 9 ஆயிரத்து 513 மாணவிகளும், கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்தில் 50 தேர்வு மையங்களில் 7 ஆயிரத்து 647 மாணவர்களும், 7 ஆயிரத்து 122 மாணவிகளும் எழுத உள்ள னர்.

ஆக மொத்தம் விழுப்புரம் வருவாய் மாவட்டத்தில் 179 தேர்வு மையங்களில் 24 ஆயிரத்து 47 மாணவர்களும், 23 ஆயிரத்து 908 மாணவிகளும் என மொத்தம் 47 ஆயிரத்து 955 மாணவ- மாணவிகள் இந்த தேர்வை எழுத உள்ளனர். இந்த தேர்வுப்பணிகளில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உள்பட 3 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்வில் முறைகேடுகள் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் விழுப்புரம் முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் தலைமையில் தனித்தனியாக பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கும் பணியில் ஈடுபட உள்ளனர்

மேலும் அனைத்து தேர்வு மையங்களிலும் காவல் துறையின் மூலம் பாதுகாப்பு வசதிகளும், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தடையற்ற மின்சார வசதிகள், போக்குவரத்து வசதிகள் ஆகியவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வறையில் ஒழுங்கீனசெயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த தகவலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி தெரிவித்துள்ளார்.

Next Story