ஊட்டி அருகே கிராம பகுதிகளில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு
ஊட்டி அருகே கிராம பகுதிகளில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் இன்னசென்ட திவ்யா ஆய்வு செய்தார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாலகொலா ஊராட்சிக்கு உட்பட்ட டி.ஓரநல்லி பகுதியில் ஒருங்கிணைந்த பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.33 ஆயிரம் செலவில் சமையல் கூடம் பழுது பார்க்கும் பணி, நஞ்சநாடு ஊராட்சிக்கு உட்பட்ட அம்மன்ஹட்டி கிராமம் முதல் நஞ்சநாடு வரை தாய் திட்டத்தின் கீழ் ரூ.5.40 லட்சம் மதிப்பில் நடந்து வரும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
தொட்டபெட்டா ஊராட்சிக்கு உட்பட்ட கப்பத்தொரை பகுதியில் தாய் திட்டத்தின் கீழ் ரூ.29.94 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட சாலை பணி, நஞ்சநாடு ஊராட்சிக்கு உட்பட்ட மேல்கவ்வட்டி பகுதியில் ஒருங்கிணைந்த பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.5.53 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் தடுப்புச்சுவர் பணி, குருத்துக்குளியில் ஒருங்கிணைந்த பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சம் செலவில் நடைபெற்று வரும் தடுப்புச்சுவர் கட்டும் பணியை கலெக்டர் பார்வையிட்டார்.
நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.20.60 லட்சம் மதிப்பில் தீட்டுக்கல் குப்பை குழி முதல் பார்சன்ஸ்வேலி வரை நடந்து வரும் சாலை அமைக்கும் பணியை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதனை தொடர்ந்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வளர்ச்சி பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்த ஆய்வில் செயற்பொறியாளர் பசுபதி, ஊட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ்கிருஷ்ணன், சுகுமாறன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக ஊட்டி லவ்டேல் பகுதியில் புதியதாக அமைக்கப்பட்டட நவீன ஆவின் பாலகத்தை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

Related Tags :
Next Story