வால்பாறை வனச்சரக பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படுவதை தடுக்க கண்காணிப்பு தீவிரம்
வால்பாறை வனச்சரக பகுதிகளில் காட்டு தீ ஏற்படுவதை தடுக்க வனத்துறையினர் விடிய, விடிய தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.
வால்பாறை,
தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் மலைஏறும் பயிற்சிக்கு சென்றவர்களில் காட்டுத்தீயில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் வனத்துறையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். ஆனைமலைபுலிகள் காப்பகத்திற்குட்பட்ட வால்பாறை மற்றும் மானாம்பள்ளி வனச்சரக பகுதியில் ஆனைமலை புலிகள் காப்பக இயக்குனர் கணேசன் உத்தரவின்பேரிலும், மாவட்டவனஅலுவலர் முகமது சபாப் அறிவுரையின் பேரிலும் வால்பாறை வனச்சரகர் சக்திவேல் தலைமையில் வனவர்கள் கோபாலகிருஷ்ணன், சபரீஸ்வரன் முன்னிலையில் வனக்காவலர்கள்,வேட்டைத்தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் காட்டுத்தீ ஏற்படுவதை தடுக்க விடிய, விடிய ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர். அட்டகட்டி வனத்துறை சோதனை சாவடியில் காட்டு தீ குறித்து விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் வழங்கி னர்.
அட்டகட்டி முதல் காடம்பாறை, வறட்டுப்பாறை, வில்லோணி, கருமலை, அக்காமலை, சிறுகுன்றா, வெள்ளமலை உள்ளிட்ட எஸ்டேட் பகுதிகளிலும், எஸ்டேட் பகுதிகளை ஒட்டிய ஆதிவாசி பழங்குடியினர் குடியிருப்பு பகுதிகலும் தனிக்குழுக்களை அமைத்து காட்டுத்தீயை கண்காணித்து, நடவடிக்கை எடுக்கவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கவும் அறிவுறுத்தி வருகின்றனர். ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் சோதனை செய்து, அத்துமீறி வனப்பகுதிகளில் சுற்றுலாபயணிகள் நடமாட்டம் உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அட்டகட்டி வனத்துறை சோதனை சாவடியில் வால்பாறைக்கு வரும் அனைத்துவாகனங்களையும் நிறுத்தி பீடி, சிகரெட் பிடிக்க கூடாது, வாகனங்களில் செல்லும் போது புகைப்பிடிக்கக்கூடாது, சுற்றுலாபயணிகள் வாகனங்களை, சாலை ஓரங்களில் நிறுத்தி சமையல்செய்வது, மதுஅருந்துவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்ற கடுமையான எச்சரிக்கை செய்து அனுப்பும் பணியிலும் வால்பாறை வனத்துறையினர் ஈடுபட்டுவருகின்றனர்.
இதே போல மானாம்பள்ளி வனச்சரகர் சேகர் தலைமையில் வனவர் ஆனந்தன், வனக்காவலர் திருநாவுக்கரசு முன்னிலையில் வேட்டைத் தடுப்பு காவலர்கள் அடங்கிய வனக்குழுவினர் மானாம்பள்ளி வனச்சரகத்திற்குட்பட்ட உருளிக்கல், அணலி, மானாம்பள்ளி, ஷேக்கல்முடி, பன்னிமேடு, ஹைபாரஸ்ட், பெரியகல்லார், சின்னக்கல்லார், சிங்கோனா, சோலையார்அணை ஆகிய பகுதிகளில் ரோந்துப்பணி மேற்கொண்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். தமிழக-கேரள எல்லைப் பகுதியில் பரம்பிக்குளம் அணைப் பகுதியின் நீர்பிடிப்பு பகுதியான மந்திரி மட்டம் வனப்பகுதியிலும் ரோந்து தீவிரமடைந்துள்ளது.

Related Tags :
Next Story