திரியம்பகேஸ்வரர் கோவில் சன்னதிக்குள் புகுந்து சாமி தரிசனம் செய்யும் கன்றுக்குட்டி


திரியம்பகேஸ்வரர் கோவில் சன்னதிக்குள் புகுந்து சாமி தரிசனம் செய்யும் கன்றுக்குட்டி
x
தினத்தந்தி 15 March 2018 3:00 AM IST (Updated: 15 March 2018 12:47 AM IST)
t-max-icont-min-icon

பிரியம்பகபுரா கிராமத்தில், திரியம்பகேஸ்வரர் கோவில் சன்னதிக்குள் புகுந்து கன்றுக்குட்டி ஒன்று தினமும் சாமி தரிசனம் செய்கிறது.

கொள்ளேகால்,

பிரியம்பகபுரா கிராமத்தில், திரியம்பகேஸ்வரர் கோவில் சன்னதிக்குள் புகுந்து கன்றுக்குட்டி ஒன்று தினமும் சாமி தரிசனம் செய்கிறது. மேலும் அர்ச்சகர் கொடுக்கும் பிரசாதங்களையும் சாப்பிட்டுவிட்டு அது செல்கிறது.

திரியம்பகேஸ்வரர் கோவில்

சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா பிரியம்பகபுரா கிராமத்தில் திரியம்பகேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இக்கோவிலுக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு வருவாய்த்துறை அதிகாரி ரெங்கசாமி கன்றுக்குட்டி ஒன்றை காணிக்கையாக கொடுத்தார். இந்த நிலையில் அந்த கன்றுக்குட்டி தினமும் கோவிலுக்குள் நுழைந்து திரியம்பகேஸ்வரரை தரிசித்து செல்கிறது.

அதாவது தினமும் காலையில் பூஜை செய்து மணி அடித்தவுடன் அந்த கன்றுக்குட்டி கோவில் சன்னதிக்குள் புகுந்து திரியம்பகேஸ்வரர் சாமியை வணங்குகிறது. பின்னர் அர்ச்சகர் மகா மங்கள ஆரத்தி காட்டுகிறார். அதையடுத்து சுவாமிக்கு படைக்கப்பட்ட வாழைப்பழங்கள், சர்க்கரை பொங்கல், தேங்காய் மற்றும் பிரசாதங்களை அர்ச்சகர் கன்றுக்குட்டிக்கு கொடுக்கிறார். அவற்றை சாப்பிட்டுவிட்டு அந்த கன்றுக்குட்டி அங்கிருந்து செல்கிறது.

நந்தி பகவானாக நினைத்து...

இதைப்பார்க்க தினமும் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகி றார்கள். அவர்கள் திரியம்பகேஸ்வரரை வணங்குவது மட்டுமல்லாமல், இந்த கன்றுக்குட்டியையும் நந்தி பகவானாக நினைத்து வணங்கி செல்கிறார்கள்.

Next Story