மயிலாடுதுறையில் ரூ.12 லட்சம் நிலமோசடி செய்த பெண் கைது
மயிலாடுதுறையில் ரூ. 12 லட்சம் நிலமோசடி செய்த பெண்ணை நிலஅபகரிப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
நாகப்பட்டினம்,
நாகை மாவட்டம் மயிலாடுதுறை கணபதி நகர் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மனைவி கல்யாணி (வயது53). இவருக்கு சொந்தமான 3,380 சதுர அடி நிலத்தை கடந்த 2011-ம் ஆண்டு மயிலாடுதுறை கூரைநாடு அபிராமிநகர் பகுதியை சேர்ந்த லிங்கராஜன் மனைவி மஞ்சுளாவுக்கு ரூ.50 லட்சத்து 25 ஆயிரத்துக்கு கிரயம் பேசி, ரூ.12 லட்சம் முன்பணம் வாங்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் நீண்ட நாட்களாகியும் கல்யாணி நிலத்தை மஞ்சுளாவிற்கு பத்திரப்பதிவு செய்து கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும், அதே இடத்தை வாங்குவதற்காக பலர் வந்து அந்த இடத்தை பார்வையிட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து மஞ்சுளா, கல்யாணியிடம் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு கல்யாணி சரியாக பதில் கூறாமலும், இடத்தை பத்திரப்பதிவு செய்து கொடுக்காமலும் இருந்துள்ளார். இதையடுத்து மஞ்சுளா நாகை மாவட்ட நில அபகரிப்பு பிரிவு போலீசில் கல்யாணி ரூ.12 லட்சம் மோசடி செய்துவிட்டதாக கூறி புகார் கொடுத்தார். புகாரின்பேரில் நில அபகரிப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கல்யாணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story